பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 3. 6)f丁。●F。牙f丁。 ' -ல்-க்-?’’ 'மணி, அபிஷேகம். அர்ச்சனை யெல்லாம் நான் பண்றேன். நீ ரெஸ்டுல இரு.' தன் மேல் படர்ந்து கொண்டு, அவரைத் தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கும் சுக நித்ரையின் சுழிப்பினின்று ஒரு அசுர ப்ரயத்தனத்தில் தன்னை உதறிக் கொண்டு, மணி விழித்துக் கொண்டார். 'இது மாதிரி ட்ரிக்ஸ் ஏதேனும் நீ காட்டுவேன்னு எனக்கு அப்பவே தெரியும். என்னை வசியம் பண்றையா?” அவர் புன்னகை புரிந்தார். 'நீ மனோவசியம் ஆனாயோ என்னவோ தெரியாது. ஆனால் நான் பண்ண வில்லை. மனப்பூர்வமா அதெல்லாம் எனக்குத் தெரியவும். தெரியாது.” 'எல்லாம் நீ சொல்றதுதான்! உனக்கு இன்னதுதான் தெரியும் தெரியாதுன்னு எனக்கென்ன தெரியும்?' "'இதோ பார் மணி, உன் வருமானத்தில், கற்பூரத் தட்டில் விழற அஞ்சு காசு கூட எனக்கு வேண்டாம். நீ கொடுத்தால் கூட வேண்டாம். நைவேத்தியத்தில், நீ உள்ளங்கையில் கிள்ளப் போற கண்டலில் ஒரு பருப்புகூட எனக்குத் தேவையில்லை. இன்னிக்கு அம்பாளைத் தொட்டு அபிஷேகம் பண்ண மட்டும் அனுமதி கேட் கிறேன்." "அதென்னடாப்பா, பக்தி அப்படி கரை புரண்டு ஒடறது?’ 'மனசு என்னவோ சஞ்சலமசயிருக்கு. அமைதியைத் தேடறேன்.' 'அமைதியை நீ எப்படி எதிர்பார்க்கறே?’’ 'திரும்பத் திரும்ப இதே பல்லவிதான் பாடிண் டிருக்கப் போறோமா?”