பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கல் சிரிக்கிறது


காளி ஹைமவதி விவாத்ரி கயணி காத்யாயினி பைரவி... கட்டுண்டு அனைவரும் ஸ்தம்பித்து நிற்கின்றனர். மணிக்கு, ஒரு வகையில் இன்று கோவில் களை கட்டியிருக்கு. பக்தர் வரிசை த்வஜ ஸ்தம்பம்வரை நிற் கிறது. இன்று வெறும் கற்பூரத் தட்டில் மட்டும் 10, 15க்குப் பஞ்சமில்லை. இன்னொரு வகையில் புளியைக் கரைத்தது-இன்னிக்கே தெரியாத் தனமாக இடத்தைக் கொடுத்து விட்டோமோ? நம் பக்த ஜனங்கள் வியவஸ்தை கெட்டவர்கள். இத்தனை நாள் மணி குருக்களை நிமிஷத்தில் இந்த சூன்யக்காரனுக்காக மறந்து விடுவார் 选矿。 z* * 'அந்த அய்யர் நல்லாப் பாடினாரே, அவர் எங்கே: இப்பவே ஒரிருவர் விசாரிக்க ஆரம்பிச்சாச்சு. 'துரத்து உறவு. வீட்டுக்கு வந்து மூனு நாளாச்சு. பிழைக்க வந்திருக்கா(ன்) (ர்) (இந்த இடத்தில் ஏதேனும் ஒன்றைத் திடமாய் உச்சரிக்கத் தைரியமும், மனமுமில்லாமல் ஒரு கொழகொழப்பு) பூஜைக்கு ஒரு கோவில் பார்த்தாகனும். அதுவரை ஒத்தாசைக்கு-' 'நாளைக்கு இருப்பாரா?” கார்க்கோடகன், கார்க்கோடகன். இப்பவே விஷயம் வேலை பண்ண ஆரம்பிச்சுடுத்தே! எங்கிருந்து வந்தார்? இடி விழுந்தாற் போல் விரிசல். எதுவரை ஒடும் தெரியல்லியே! இருந்த இடத்திலிருந்து கத்தினார். எரிச்சல், . தருமூ! ஒரு குடம் ஜலம் மொண்டு வா!' அவருக்குப் பேர்தை தெளியவில்லை. அவன் என்னவோ கேக்கறான் பார்!’ என்று அவளே காதில் ஓதிக் கவனத்தில் உரைப்பது போல் இருந்தது.