பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

தடை செய்தது. 'கோடரி வரி' முதலான புது வரிகளும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. 'பொது' வினிடத்தில் புதிய நில உறவுகள் உருவாக்கப்பட்டன. காடுகள் வணிகத்திற்குரிய பொருளாயின. மலையின் சாத்தியமான பகுதிகளில் குடியேற்ற விவசாயம் உருவாக்கப்பட்டது. இத்தகைய நடைமுறைகளின் விளைவாக மலையாளிகள் தம் சுதந்திர வாழ்வை இழந்து கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெறும் குத்தகைதாரர்களாகவோ, கூலி விவசாயிகளாகவோ, பணியாட்களாகவோ அவர்கள் மாற நேரிட்டது. பழைய முறையைச் சீரழித்த இப்புதிய மாற்றங்கள் அவர்களைத் திசையற்றவர்களாக்கியது; தோல்வியடைந்தவர்களாக உணரச் செய்தது. அரசு மற்றும் ஆதிக்க சக்திகளுக்கு முன்னால் அவர்கள் பலமிழந்து நின்றனர் என்கிறார் ஆர்னால்டு. இது 1800களின் இறுதியிலும் 1900களின் முதற் காற்பகுதியிலும் அரசுக்கு எதிரான பெருங்கலவரங்களாக உருவெடுத்தது.

கிட்டத்தட்ட ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முந்திய விவசாய மயமாக்கலையும், விவசாய மயமாக்களுக்கு (Seltled Agriculture) எதிரான எழுச்சியையும் இத்துடன் ஒப்பிடலாம்,

கேரளத்திலுள்ன வயனாடு பகுதியிலுள்ள மலைப் பகுதி விவசாயத்திற்கும் பொது என்கிற பெயரிருந்ததை அய்யப்பன் சுட்டிக் காட்டுகிறார். (A. Ayyappan, Report on the socio- Economic conditions of the Aboriginal tribes of the province of Madras - Quoted in K.Sivathambi, Op.clt.p.191)"வயநாடு பகுதியிலுள்ள குறிச்சியார்கள் எனப்படும் மலையின மக்கள் மத்தியில் நடைமுறையிலுள்ள பொதுச் சாகுபடிக்கு புனம் சாகுபடி என்று பெயர்" என அய்யப்பன் குறிப்பிடுவதைக் சுட்டிக் காட்டும் சிவத்தம்பி, "சங்க இலக்கியங்களில் குறிஞ்சிச் சாகுபடி விளக்கப் பட்டுள்ள மைக்கும் (புறம் 120) பதித் 58, அகம் 308, 368, குறிஞ்சி 100, நற்.5, 209 மலை 286-801...) அய்யப்பன் விளக்குகிற பொதுச் சாகுபடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை " எனக் குறிப்பிடுவது இங்கே கருதத்தக்கது. (முன்குறிப்பிட்ட நூல், பக். 154- அழுத்தம் நமது.)

பாசனம் என்கிற உயர் தொழில் நுட்பத்தோடு களம் புகுந்த விவசாயமயமாக்கல் என்கிற செயற்பாடு இந்திய, தமிழகச் சூழல்களைப் பொருத்தமட்டில் தனித்துப் பார்க்க இயலாத ஒன்றாக உள்ளது. அது பார்ப்பனமயமாக்கலுடனும் வேந்துருவாக்கத்துடனும் இணைந்து வருகிறது; பின்னிப் பிணைந்து கிடக்கிறது. பாசனஞ் சாராத உற்பத்தியை மேற்கொண்டிருந்த மக்கட் பகுதியின் அதிகாரங்களும் அவர்தம் நிலங்களும் பறிபோவதாகவும் விவசாயச் சமூகம் என்றழைக்கப்படுகிற பார்ப்பான - வேளாண் குடி மக்கள் அதிகாரம் பெறுவதாகவும் அது அமைகிறது. பாசனம் சாராத உற்பத்தியை மேற்கொண்டிருந்த மக்கட் பகுதியினரின் பொதுச் சாகுபடியும் அவர்கள் மத்தியில் நிலவிய பொது உணர்வும் அழிக்கப்பட்டன. பல்வேறுபட்ட தனியுரிமை உறவுகளுடன் விவசாயமயமாக்கல் இணைந்து நிற்கிறது.

வேள்விகளும் யாகங்களும் தழைத்தோங்கிய ஒரு விவசாயப் பண்பாடும்