பக்கம்:கள்வர் குகை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

ஒரு நாள் அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்ற பிறகு, அங்கே ஏன் கூடிப் பேசுகிறார்கள், அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது, என்று தெரிந்து கொள்வதற்காக, மெதுவாக அந்த இடத்தை நோக்கி நடந்தான். அந்த இடத்தைச்சுற்றி ஒரே புற்றும் புதரும் செடியும் கொடியும், மரமுமாக வளர்ந்திருந்தது. வெளியில் நின்று கொண்டு பார்த்தால் சாதாரணமாக அந்த இடம் யார் கண்ணுக்கும் தெரியாது. அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி நன்றாகக் கவனித்தான் நம்பி; மலையியின். நடுவில் ஒரு பாறை துண்டாக இருப்பதுபோல் தெரிந்தது. அதற்குச் சற்றுத் தூரத்தில் ஏதோ ஒன்று மின்னிக்கொண்டு கிடந்தது. போய் அதையெடுத்துப் பார்த்தான், வைரக் கற்கள் பதித்த தங்கச் சங்கிலி அது. நல்ல வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சரி, மீதியை நாளைக்குப் பார்த்துக்கொள்ளுவோம் என்று அதை எடுத்துக்கொண்டு திரும்பி வந்துவிட்டான். அவனுக்கு அந்த மூன்று ஆட்களைப் பற்றியும் விவரமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஒரு ஆசையுண்டாகியது.

அதன் பிறகு மறுநாள் மறுபடி வந்து பார்த்தான், அன்று அவர்கள் வருவதற்கு முன்பே அந்த இடத்தில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான். அந்த மூன்று ஆசாமிகளும் வந்தார்கள், அவர்களில் ஒருவன் தான் தமிழன். மற்றவர்கள் இரண்டுபேரும் தலையைத் திட்டுத் திட்டாக வழித்து, முடியிருக்கும் இடத்தில் இரண்டு சடைகள் பின்னித் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மங்கோலியர்கள், அவர்கள் மூவரும் வந்து மங்கோலிய மொழியில் ஏதேதோ