பக்கம்:கள்வர் தலைவன்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-1} கள்வர் தலைவன் 37 இர ண் டாவது அங்கம் மு. த ற் காட் சி. இடம். புஷ்பபுரியில் அரண்மனையிலோர் அறை. செளரியகுமாரன் யோசனை செய்துகொண்டு நிற்கின்ருன். செள.இறந்துபோன ஜெயபாலன் தன்னுடைய குருவென்று நமக்குக் கூறியிருக்கின்ற ஜீவசித்தியே இவனென்று கினைக்கின்றேன். பலாயனன் தன் வீட்டில் வந்திருப் பவனுடைய அடையாளங்களைக் கூறினதற்கும் ஜெய பாலன் கூறியதற்கும் சிறிதேனும் பேதமில்லை. பெயரும் ஒத்திருக்கின்றது. ஜீவசித்தி என்பது சாதாரணமான பெயர் அன்று. ஏன் இன்னும் pவசித்தி வரவில்லை ? உடனே அனுப்புகிறேன் என்று கூறிச் சென்ருனே பலாயனன். இந்த ஜீவசித்தியிடமிருந்து எப்படியாவது நமக்கு ஜெயபாலன் கொடுத்திருக்கின்ற விஷத்திற்கு மாற்றறிய வேண்டும். தன்னுடைய குருவுக்கன்றி வேறெ வருக்கும் அம்மாற்று தெரியாதென்று. அவன் நமக்குக் கூறினனல்லவா ? எப்படியும் இவனிடமிருந்து இதை அறியவேண்டும். ஆயினும் இந்த ஜீவசித்தி செவிடும் ஊமையுமாமே! இதை நமக்குஜெயபாலன் கூறவில்லையே! பெரிதன்று. எனது கையிலகப்பட்டபின் விட்டேன இவனே! உண்மையை அறிந்து கொண்டு ஜெயபால னுக்குச் செய்தவண்ணம் இவனுக்கும் செய்யவேண்டும் -உம் : இப்பொழுது தான் கமக்கு குருபார்வை திரும்பு கிருற் போலிருக்கின்றது : பிதாவோ இறந்து விட்டார் 1 -அப்பா ! என்னுடைய செய்கைகளே கான் நினைத்தால் எனக்கே பயமாயிருக்கிறது! கினையாதிருத்தலே நலம்!-- சங்கனும் விடங்கனும் இன்னும் திரும்பி வரவில்லை. ஆயினும் ஏமாங்கதனைக் கொன்றே அவர்கள் திரும்பி வருவார்கள் சந்தேகமில்லை. ஏன் ஜீவசித்தி இன்னும் வரவில்லை ! நேரமாய் விட்டதே-- - ஏமாங்கதன் ஒரு வயதுமுதிர்ந்த வயித்தியகனப்போல் - வேடம் பூண்டுவருகிருன். வாரும் சுவாமி. தங்களுக்காக இத்தனை காலம் காத்துக் கொண்டிருந்தேன். தாம் இப்பட்டணத்திற்கு வந்தது. என்னுடைய பாக்கியமே. உட்காரவேண்டும் (எம்ாங்க தன் உட்காருகிருன்) தங்களுக்கு ஜெயபாலன் என்றெரு