பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

R.S. இன்னிக்கு நீங்களே திறவுங்கள். Cash Checking இன்னிக்கு உங்களுடையது தானே! இன்னிக்கு ஒரு வேளை எனக்கு மலை இறங்கலும் ஏறலும் மிச்ச. மாகட்டும். ஒரு நாள் இந்த மாடிப் படியிலேதான் எனக்குக் கைலாசமோ. நரகமோ. ஒரு வழியா மாரடைச்சுப் போயிட்டால் கைலாசம், இழுத்துப் பறிச்சுண்டிருந்தால் நரகம் மேலும் வயசாச்சு-’

“என்ன வயசாச்சு ? உங்களைவிட நான் முனு வயசு மூத்தவன், தெரியுமோன்னோ?”

“உங்களுக்கென்ன, நீங்கள் மாப்பிள்ளை மாதிரி யிருக்கேள் என்னை ஆயிரம் வியாதி பிடுங்கித் தின்கறது. B.P., espo, gastrihs, 2.3Tsotsiot- ogo, diabetes, heart போதுமா? வாங்க சம்பளம், மாத்திரைக்கும் ஊசிக்குமே சரியாயிருக்கு. தவிர இது யம சிம்மாசனம், தலைக்கு மேல் மயிரிழையில் சதா கத்தி. உமக்கென்ன, இக்கா பிடுங்கலா? இது கோணல், குறுகல்னு பக்கம் பக்கமா எழுதி வெச்சுட்டு, கட்டின வீட்டுக்குப் பழுது சொல் விட்டு, அடுத்த ஸ்டேஷனுக்குப் பேர் சொல்லாமலே, கேத்ராடனம் போயிடுவேள். நம்ம பாடு தான் தினம் கதி கலக்கம். ஐயோ, கிட்டங்கியில் சர்க்கரை மூட்டை யோடு மணல் மூட்டை அடுக்கியிருக்கோ? எண்ணெய் டின்னோடு, ஜலமும் ஸ்டோரேஜோ? நாலு பக்கமும் ஒத்தைக்கல், சுவர் மாதிரி மூட்டை, நடுவிலே கடகடா குடுகுடு பள்ளமோ? போதுமப்பா போதும், நானும் நாளை எண்ணிண்டு தானிருக்கேன். நல்லவேளை இந்த ஒட்டை உடம்புக்கு extension கிடைக்காது, இன்னும் இருக்கும் இரண்டு வருடங்களில் இன்னும் லொட்டை’ ஆகிவிடும்-” -

முத்தையா கை கூப்பினான். ‘மானேஜரய்யா, அதுக் குள்ளே நம்ம பையனுக்கு நீங்க விடிவுகாணனும்!”

“gp3ogurt, you are impossible. Cash, Cesh, ika

Rr

இறங்கு