பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 199

‘அப்படித்தான் செய்யவேண்டும். சரி. காசி, போய் Cash க்ளோஸ் பண்ணு’ -

‘Mr. Manager, கோவிலுக்குப் போ வ லா ம் னு இருக்கேன் !”

“very good. முத்தையா அழைச்சுண்டு போவான். அவனை லாட்ஜுக்கு அனுப்பறேன்.”

“Thank you.” நான் இன்னும் Pass book எழுதிக் கொண்டிருக் கிறேன். சிவராமனும் விசுவும் ஏதோ கிசுகிசு. இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. அவர்கள் எதிரே முறம் போல் ஒரு பெரிய ரிஜிஸ்தர் விரித்தபடி. ரெவின் யூ ஸ்டாம்ப் அங்கங்கே அந்தப்பக்கத்தில் ஒட்டி .யிருக்கிறது.

சம்பளப் பட்டியல் போலும் ! சற்று நேரம் கழித்து ஊர்வலம். முன்னால் காஷியர்.

அடுத்து முத்தையா, தலையில் பணப்பெட்டி, அதன் மேல் ட்ரே (தட்டு) யில் இன்றைய நோட்டுக்கள், கட்டுத் தைத்தவைகளும், தைக்காதவையுமாக வழிந்தன.

அடுத்து இன்ஸ்பெக்டர். ஊர்வலம் படியிறங்குகிறது.

மெதுவாக. அப்போது தற் செயலாக என் தலை நிமிர்எனக்கு உடல் பூரா குப் பென்று வேர்த்துவிட்டது. கைகள் வெலவெலத்துக் கையைத்துக்க முடியல்லே. வ ய ைட ச் சு ப் போச்சு. உடம்பு கல்லாக் கனத்துப் போச்ச.

சற்று நேரம் கழித்து முத்தையா மூணு தாண்டலில் மேலே தாவி வந்தான்.