பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா. ச. ரா.

(ஏன் இவ்வளவு கொடுரமாயிருக்கார் ?)

மலேரியா ஜூரம் வந்தாற் போல் காஷியருக்கு உடல் வெட வெட வென உதறிற்று.

மானேஜர் பேசினார் என்று சொல்ல மாட்டேன். வார்த்தைகள் வாயினின்று உதிர்ந்து கொண்டிருந்தன. தனித் தனிப்பந்துகள், உயிர்கள், த்வனிகள். இந்த அமைதி உள் கொந்தளிப்புக்கு போர்வை போர்த்த அமைதி. பயமாயிருக்கு வசியமாயிருக்கு. சுவாரஸ்யமா யிருக்கு. இது பிய்த்துக் கொண்டால் என்னவாகும் என்பதை நினைக்கவே-ஊஹகும் வேண்டாம்.

இதை எடுத்ததற்கோ. தானாக இறக்கை முனைத்துப் பறந்து விட்டதற்கோ என்ன ருசு ? அடையாளமா நம்பரா ? எல்லாம் பத்து ரூபா நோட்டுக்கள்... யார் எடுத்தது ? யார் வேணுமானாலும்- அம்பி சொல்றான். ஆனால் அம்பி தானே ? அம்பி வேத வாக்கா ? அம்பி யார் இவனை நானே இன்னிக்குத் தானே முதலாப் Laff3p3, go so Cash balance Register ag கொண்டு வந்து என் முன்னால் வைத்ததும் நான் எப்போதும் போல் ஒரு கண் மூடிக் கையெழுத்துப் போட் டுட்டேன். நான் மட்டும் என்ன ஒழுங்கா? எல்லாம் ஜயமுள்ள வரை பயமில்லை எ ன் கி ற அசட்டுத் தைரியத்தில் தானே போயிண்டிருக்கு. ஆனால் ரூபா எப்போப் போச்சு, எப்படிப் போச்சு? இந்தப் பணத்தை inspector check பண்ணத் தேவையில்லை தெரியு மோன்னோ ? நேற்று Closing balance உடன் அவர் சரி தெரியுமோன்னோ ? இன்னி Shortage அவரைப் பாதிக் காது, தெரியுமோன்னோ ?”

தெரிகிறது. எனக்கே தெரிகிறது. ஸார், வகுப்பல்லவா தடத்துகிறார் !

‘முத்தையா, மஹானுபாவா, தவிக்கிறையே என்ன?”