பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 3 #3

னேளாம்: wind mili மாதிரி wind mil நான் பார்த்த தில்லே, அது எப்படியிருக்கும் ? அவர் பிள்ளை Englad returned, அவன் பார்த்திருப்பான், எனக்குப் பிள்ளையே கிடையாது- அவர் உங்கள் ஜாடையில் அப்படிக் கை காட்டிக் காண்பிச்சபோது, Conference table ஏ கொல் Regional Manager சிடுமூஞ்சு. அவரே வாய் விட்டுச் சிரிச்சுட்டாரு.’

எனக்கு நா வரண்டது. மனுஷனுக்குப் பைத்யம் பிடிச்சுட்டுதா ? என்னை எச்சரித்து விட் டு இவர் ஏன் *றாபனா பண்றார் ? அல்லது அதிகார வர்க்கத்தின் விளையாட்டே இப்படித்தானா ?

இன்ஸ்பெக்டர் முகத்தில் ‘ஈ’ ஆடவில்லை. ‘உடனே ஹைதராபாத் மானேஜர், ஒ அந்த ஆளா ? சுத்த மோசம்னா அவர் என் ப்ராஞ்சுக்கு வந்த போது ஒரு ஆயில் மில் Stock checkingக்குப் போனோம். inspection முடிஞ்சு ஆளும் அடுத்த campக்குப் போயாச்சு அப்புறம் அந்த client என்கிட்ட சொல்றான், பேச்சு வாக்கில்: இன்ஸ்பெக்டருக்கு ரெண்டுடின் fast passenger இலே புக் பண்ணேணுங்க. ஒண்னு Madras ஒண்னு: மதுரை. .ெ ர ண் டு ம் ஒ. சி. கிராக்கி. சொன்ன மரியாதைக்கு உடனே அனுப்பிட்டேன். பைசாவுக்குக் காத்திட்டிருக்கேன், ஐயா சொல்லிக்காமலே போயிட்டாரு போல இருக்கு-.’

இந்த சில் மிஷம் எங்கேயும் நடக்கறது. நம்மால் முழுக்கவும் தடுக்க முடியாது. எனக்குத் தெரியும். “Madras booking ujfinis. gaug,5, Gapu-g வார்ட்டர்ஸ் அங்கே, ஆனால் மதுரை booking- அது ஏன் ?”

‘அவர் பெண்ணை மதுரையில்தான் கொடுத்திருக் காளாமே ? இதெப்படி ? கரகோஷமே வாங்கிட்டேள் போங்கோ, R. S. i.. !”