பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 1

உள்ளே துழைகையிலே மனம் எங்கோ இழுத்துச் செல்லும் ஒரு மயக்கம்.

வெளித்தாழ்வாரத்தில், உன்ள்ே,சோபாக்கள், நாற்காலி வகைச் சாமான்களின் செறிவாலும், வாசலுக்கு வாசல், ஜன்னலுக்கு ஜன்னல், திரைகள் தொங்குவதாலும், வீட்டிலேயே லேசானதொரு மங்கல், ம்ருது நிழல்-இருட் டென்று சொல்ல மனமில்லை, சொல்லத் துவங்கில் அதுவு மில்லை. தேங்கியது.

காற்றில் சீலைகள் ஆடி மி த க் கை யி ல் , யாரோ பெருமூச்செறிவது போன்ற பி ர ைம . சொல்லத் துவங்கிய ரகஸ்யம் வெளிப்படவில்லை. சொல்ல வந்த தென்னவோ ? செவியோரம் அதரங்கள் உராய்வது போன்று ஒரு நினைப்பு ஆனால் உராயவில்லை ஊமைக்கனாவின் ஊமைப்பேச்சு,

  • !*

மாடியில், படிக்கட்டின் திருப்பத்தில் ஒரு சிலை.

பாற்கடலில் லஷ்மி தோன்றினாள்.

சிவன் விரித்த சடைமேல் ஆகாசகங்கை இறங்கினாள்.

யாக குண்டத்தினின்று கிருஷ்ணை எழுந்தாள்.

இவை:

பையல் பருவத்தில் என்னையொத்த சிறாரோடு நானும் எதிர் வீட்டுத் திண்ணையில் கைலாசத் தாத்தா காலைப்பிடித்து, அவரிடமிருந்து காலும் பாதியுமாய், அரைத்துக்கம் முழுத்துக்கத்தில், தாம்பூலத்தின் கொழ கொழப்புடன் பொக்கைவாய் வார்த்தைச் சிதைவுகளுடன் கழன்ற கதைகள் நான் கேட்டவை.

இது நான் கண்டது.

கண்டதும் கேட்டதும் வண்ணம் குழைந்து இது இப்புவியுமில்லை, அங்கிருந்தும் வரவில்லை. எ ன் று.