பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு. 37

அமானுஷ்யை.

ஆச்சரியமாயிருக்கிறது,

அச்சமாயிருக்கிறது.

ஆனால் எப்படியோ ஏதோ விதத்தில்

பொருத்தமாயிருக்கிறது.

பதியாத பாதங்கள்.

காற்றில் வரைந்து காற்றில் கரைந்து விடப்போம்

கானல்.

காலையில் எண்ணெய் ஸ்னானம் செய்து, அகிற்புகை போட்டு நன்கு உலர்த்தி,

மாலையில் வங்கி வங்கியாய்ப் பிசு பிசு அலை பொங்கு கூந்தல்,

இருளில், ஜ்வலிக்கும் மூக்குத்தி.

நெற்றியின் செந்தூரப் பொட்டு.

எண்ணங்கள், எண்ணத்திட்டுக்கள், ஒன்றுக்கொன்று ஒட்டு இன்றி

ஆனால் இழைந்து குழைந்து காட்டும் தோற்றச் சிதர்கள்

அ ம | னு ஷ் ைய .


மேஜை சாப்பாடு,

மானேஜருக்கு உள்ளங்கையளவுக்கு இரண்டு சின்ன சப்பாத்திகள், ஏதோ கூட்டு. எங்களுக்கு வற்றல் குழம்பு, பருப்புத் துவையல், மத்யான ரஸம்.

‘அம்பி, என் சாப்பாட்டைப் பார்த்து நீ வெட்கப் படாதே. அதற்கேற்றபடி, உன் வயிற்றைக் குறுக்கிக்கப் பார்க்காதே. குறுக்கிக்கவும் முடியாது. வயசுப் பையன்

நீ நல்லா சாப்பிடணும். இது என் தலையெழுத்து. சாப்பாட்டு ராமனாயிருந்துதான் பட்டினிச் சாவில்