பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு, 139

இந்த ஹெட் ஆஃபீசிலிருந்து வராங்களே இவங்க தங்களை மேலுன்னு நினைச்சுக்கறது. வந்த இடத்தில் இல்லாத கார்வாரெல்லாம் பண்றது. இவாளுக்கெல்லாம் R.S. மூலம் த ைல பிற க்க ம் தானே! ஒ பேரைச் சொல்லாமல், ஊரைச் சொல்லாமல், அவங்க வாலாட் டினால், மண்டையில் தட்டுவது எப்படி என்று எனக்குத் தெரியும். எல்லாரையும் சேர்த்து RSட மேல் பழிவாங்கின மாதிரி நல்லா அவனைப் பொக்கை வெச்சேப்பா: ஹாஹா-ஹா-ஹா!’

அவர் சிரிப்பில் மேஜை மேல் பாத்திரங்கள் அதிர்ந்தன. கண்களில் ஜலத்தைத் து ைட த் துக் கொண்டே, எத்தனை வயசு ஆனால் என்ன? உத்யோக வாழ்க்கையின் அலுப்பைக் கலைக்க இப்படிச் சில அல்ப் த்ருப்திகள்: கிடைச்ச வரை பேச்சுக்குக் கொஞ்ச நாள் தீனி ஆச்சு!”

பாலா முகத்தில் லேசான புன்னகை புரிந்து கொண்டா, புரியாமலேயா? என்னவென்று அவள் விளக் கம் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஆமாம், நான் இங்கு வந்தது முதல் இன்னும் பாலா ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே! அவள் குரலே கேட்கவில்லையே!

அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. ஒரு வேளை புது இடம்; அல்ல. இத்தனை சுகத்துக்கு நான் பழ்க்கப்பட்டவன் அல்லன். தூக்கம் தேடி முடிய கண் இமையுள் இனம் தெரியா வார்த்தைகள், அவை பயக்கும் மெளனமான ச ப் த ரே ைக க ள் தோன்றி மறைந்து தோன்றிக் கொண்டிருந்தன.


யூனிபாரம். உருப்படியா, உரமாக, நிச்சயமா இரண்டு ஸெட் வெள்ளை உடை. வலிக்கறதா? மாலையில் களைந்ததும் மறுபடியும் அம்பி (எப்பவுமே அம்பிதான்!) மானேஜர் என்னிடம் காட்டும் தனி உறவின் விளைவு.