பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

சஞ்சீவி மலையை ஏந்திப் பறந்து வரும் ஆஞ்சநேயர். ராம பட்டாபிஷேகம். தோளில் கிளியுடன் மீனாகதி,

பின்னால் மது ைர யி ல் , கோவிலில் பார்த்தேன். வேண்டுதலைக்கு வளர்த்துக் கோவிலுக்கு விடப்பட்ட கிளிகள், கூண்டுகளிலிருந்து மீனாr மீனாr’ என்று அழைக்கின்றன.

பாலாவின் அழகுக்கு ஏற்றபடி அவள் குரலும் இருந்து அவள் என்னை, எல்லோரும் போல், ‘அம்பீ” என்று அழைக்கமாட்டாளா என்று சில சமயங்களில் தோன்றுகிறது.

ஆனால் பாலா கூண்டினுள் இருக்கிறாள். கூண்டுக் கிளி ‘'மீனாr!” என்று அழைக்கிறது. அதுவுமில்லை இவள், ஒப்பு உவமை இந்த மட் டி ல் தான். விசனம், கெட்டிப்பாலின் சோம்பலான பொங்கல்போல், நெஞ்சில் மேடு இடுகிறது. இங்கு நான் வந்திருக்கக்கூடாது. இது என் பல்லவி ஆகிவிட்டது.

ராமகிருஷ்னர். கண்களில், அ ந் த உள்ளுக்கு வாங்கிப் போ ன பார்வை லேசாக வாய் திறந்து, இரண்டு பற்கள் நுனி மட்டும் தெரியும் அந்த லேசுப்புன்னகை.

மார்மேல் கைகட்டி, பக்கப்பார்வை விறைப்பாய், முண்டாசு விவேகானந்தர்.

ஆள உயரத்துக்கு வெண்கலக் குத்துவிளக்கு எப்பவும் பளிங்கெனத் துலக்கிய பூஜா பாத்திரங்கள். (இங்கு வேலைக்காரியில்லை. எல்லாக் காரியங்களும் பாலார்

எப்பவும் தேங்கிய அகிற் புகை.