பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா, ச. ரா.

‘இருந்தாலும், கலகலத்துப்போன ஏடுகளை விட முடிவில்லையே! பெற்ற பெண் தூக்கி எரிகிற புத்தகமா? அம்பி, அந்த பாலாவை நீ பார்த்ததில்லே, உனக்குத் தெரியாது

“அவள் பாடங்கள், பள்ளிக்கூட ப்ரோ கிராம்கள்

டான்ஸ், பேச்சுப் போட்டி, வியாசப் போட்டி, பாடங் கள்-இவை தவிர மற்றெவையிலும் அவளுக்கு அக்கறை கிடையாது. சில சமயங்களில் அவளுடைய புத்திவேகத்தில் அவளுடைய பேச்சைச் சுருக்கப் பின்பற்ற முடியாமல் போகும்போது, பொறுமையிழந்து கத்துவாள். சுபாவத் திலேயே ஆத்திரக்காரி தான். செல்லப்பெண். கேட்கவும் வேனுமா? இப்போ டல் லாயிட்டாள்.

“ஆனால் அவளை நாங்கள் பார்த்த கோலத்திற்குப் பிறகு என்ன ஆச்சு? அவள் தாயார் உள்பட அவளைத் தொடமுடியவில்லை. அவள் தொடவிடவில்லை;இப்போ பார்த்தையே இதே ரகளைதான். தொடவரதே தீம்புக்குத் தான் என்கிற திகிலில், யார், ஏன், எதற்காக என்கிறதெல் லாம் மறந்துபோய், பறந்து போய்- இல்லை அறவே அழிஞ்சு போன மாதிரி ஒரு அதிர்ச்சி. நாம் எல்லாத் துக்கும் அதிர்ச்சி என்று சொல்லிடறோம் தமிழில் எனக்கு தேர்ப்பதம் கிடைக்கவில்லை. Englishஇல் trauma என்கிறான். பாலா நம் கண்ணுக்குத் தெரியா மதில்களுள் மாட்டிக் கொண்டிருக்கிறாள். தாண்டி அவளால் வர முடியவில்லை. அம்பி, விடியுமோ?

கஷ்டம், கஷ்டம் என்கிறோம். படுகிறவர்களுக்கா படுகிறவர்களைப் பார்ப்பதற்கா?

‘இது நேர்த்தபிறகு, நான் மாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். நாங்களே எங்களுள் ஒரு மஹா பயத்தில் ஒடுங்கிப்போயிட்டோம், யார் முகத்தில் விழிப்போம்? உபசாரம் கேட்க வருபவர்களைக் கண்