பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 ல ச. ரா

சிவராமனுக்கும் விசுவத்துக்கும் அல்வா நெய்க்கடலை வாங்கிக் கொடுக்கக் கூட அவகாசம் இல்லை.

அவர்களுக்கு ஸ்டேஷனில் யாரையோ தெரிந்திருந்த தால் ரிஸர்வேஷன் .ெ ர ம் ப வ ம் சிரமப்படாமலே கிடைத்து விட்டது.

ஸ்டேஷனுக்கு மானேஜர் வந்திருந்தார். வண்டி ஊதிவிட்டது. புறப்படும் சமயத்தில் என்னை இழுத்து இறுக அனைத்துக் கொண்டார். ஏதோ சொல்ல முயன்றார். தொண்டை அடைத்து விட்டது ரயில் கிளம்பிவிட்டது மானேஜர் நிலை கண்டு விசுவமும் சிவராமனும். சுருண்டு போயினர். ஆசியில் தூக்கிய கையுடன் அவர் நிற்கையில் அவரைவிடத் தனிமையான மனிதன இருக்க முடியாது.

அப்பா!

ரயில் ப்ளாட்பாரத்தைத் தாண்டி இருளுள் புகுந்து விட்டது. -


‘அம்பி லார் ! தந்தி!!’ தந்தியா? எனக்கா யார் தந்தி: “Manager and daughter dead. Meeat me Dr Murthy.” இங்கு வந்து இன்னும் ஆறுவாரங்கள் ஆகவில்லை.” ஆச்சரியம்? அதிர்ச்சி? அழுகை??? கண்ண்ைக் கட்டி விட்டுத் தட்டாமாலையும் சுத்தி விட்ட மாதிரி இருக்கிறது. வேறேதும் தெரியவில்லை.


ரயிலை விட்டு இறங்குகிறேன். இங்கு விட்டுப் போய் இன்னும் ஆறு வாரங்கள் ஆகவில்லை. ஆனால் இந்த