பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 @,

முகம்தனித்தனிக்காட்டி கனவேகத்தில் எதிர் கடந்து கொண்டிருக்கின்றன, உ ள் ள ங் ைக ச் சிவப்பில், வெள்ளையில், சுழன்று சுழன்று...

மையிருள் அன்று. சிக்கிரிகலந்த காப்பிப்பொடியிருள். அதில் நீல நெருப்புக் கோடுகளில், வித வித, புதுப்புது ஜியோமிதிக் கோடுகள், கோணங்கள், graph அலைகள், மிதப்புக்கள், சின்னங்கள், சிற்பங்கள், பிரம்மாண்டமான பல்விகள், பாம்புகள், பச்சோந்திகள், முதலைகள், புழுக் கள், வண்டுகள், சரித்திரத்துக்கும் பூர்வ விலங்குகள் ராஷதங்கள், ஒரே சமயத்தில் பதினெண் சூரியன்கள், அதே வானில் கூடவே இருபத்திஏழு சந்திரோதயங்கள், அஸிங்கமான கொப்புளங்கள், பொருக்குகள், சீழ்கள், ரசகுண்டுகள், அடுக்கடுக் காய்த் தலைமேலேயே சரியும் நrத்ரப் பந்தல்கள், இசை கேடல்கள், திசைபின்னங்கள்.

ஒயாமல்கக்கியவண்ணம்

கண்ணைத்திறக்க வொட்டவில்லை.

மூடிய கண்ணுள் விழி அமரவிடவில்லை.

அத்தனையும் வலிஜன்னியில்

தேய்ந்து தீர்ந்த

புலன் நேர்த்திகளின்

ஜ்வர கணிதங்கள்

-கணங்கள்

மண்டையிடி. உள்ளே மதில்கள் தகர்ந்தன.

தகு திமி திமிதக்க தக்க தின

தகு தளாங்கு தருகு தளாங்கு

திருகு வலியின் த்ருகு தாளங்கள்

மெருகு வலியின் ப்ரு கடை முறுக்குகள்.

காடை கவுதாரி

கூகை கோட்டான்

தாரை தப்பட்டை