பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 Gfr. rrr

அதான். கதையே அதான் ஒடி ஒடி,ஊதிஊதி முப்பாட்டன் சம்பாரிச்சதை தாத்தனும் ஆத்தனும் குந்தி ஊதி, குடிச்சு அழிச்சாங்க. அவங்க செத்தாங்க, குழல் தான் மிச்சம். வரவங்க நாலுபேர், நம் செலவில் தோசையும் காப்பியும். தின்னுட்டு, குதப்பிய தாம்பூலத்தைக் குந்திய இடத்தி லேயே துப்பிட்டு பேஷ் பேஷ்!!” ரெண்டுதரம் தலையை ஆட்டிட்டா, பைத்தியங்க, ராப் பூரா ஊதி ரத்தத்தைக் கக்கிட்டிருக்கும் பின் தலைமுறை. இப்படி ஏதுக்குன்னு கேட்டால், மூஞ்சியிலேயே அடி. எதிர் பேசமுடியுமா ? என் பாட்டன் தன் பிள்ளைகள் கைக்கொள்ளி வாங்கல்லே. தண்ணி. அதுலே அப்பனுக்கும் பிள்ளைக்கும் போட்டி, புள்ளே உயிரைக்கொடுத்துப் போட்டியிலே கெவிச் சுட்டான். பேச்சென்னவோ, ஸங்கீத உலகத்தின் வால் நஷத்ரம் அவதாரம், அவுட் வானம் உச்சத்துலே வெடிச் கட்டு தாம்! வீட்டுலே உள்ளவங்களுக்கல்ல தெரியும் விடிகாலையில் வாந்தியிலேயே உடம்பு ஊறிக்கிட்டுக் கிடந்தது.

அடுத்தவருசம் தாத்தா. அவருக்கப்புறம் குடும்பம் சளைப்புத்தான். குடியிலே குடும்பம் முளுவிப் போனது தான். குழலின் முதல் கணக்கு. பெரிய காவு மாஸ்டர். ஒடிச்சு அடுப்பில் வெச்சாத்தான் விடியும்னு ஒரொரு சமயம் தோணுது. ஆனால் அதுக்கும் மனசு வல்லியே : அதுக்குத் துணிச்சல் வேணும். தன் மிச்சம் ஆவ ஆவ, தலைமுறைக்குத்தலைமுறை அதுக்கு உசிர் கூடுது. நாம் ஆண்ட பொருள் பிறகு நம்மை ஆளுது. இப்போ அதன் கிட்டே கோமு மாட்டிட்டிருக்கா’’

முட்டுவான விளிம்பை உதைத்துக் கொண்டு.கிழக்கில் ரு புள்ளி கிளம்பி, பெரிதாகிக் கொண்டே, கிட்டக் கிட்ட வருகிறது. கம்பீரமாய் மூன்றாம் வகுப்பு, புவியி யல் மூன்றாம் பாடத்தில் பூமி உருண்டையென்று நிரூ பிக்கும் கப்பல் போல் அந்த உயரத்திலும் அந்தச் சிறகு களின் வீச்சு அழுத்துகிறது. அது பறக்கும் உயரத்தின்


f:


இ.