பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 57

உச்சாணியில், அதன் நிழல் என் மார்பைக் கடக்கும் உணர்வில், என்னத்தை நினைவு மூட்ட இச்சமயம் பார்த்து வருகிறது?

காலமும் கோள வடிவம் என்றா? மோகாம்பரி அதனிடம் என்ன சேதி விடுத்திருக் கிறாள்? மதுரை மீனாக அம்மன் கையில் கிளி. மோதாம்பரி அம்மன் தோளில்

- அம்பி, எந்தப் பழக்கத்திலும் நான் கெட்டிழிஞ்சு போயிடல்லே. கையில் இந்தக் கத்தி என்னைச் சுத்தி மரத்தின் பச்சையை வெச்சிட்டு சொல்றேன். வெறும் வேத்திலையே எனக்கு மாரடைக்கும். இந்தக் கிணத்தைத் தோண்டின உடல் உழைப்பில் எனக்கும் சமபங்கு உண்டு. இந்த ரெண்டுகையாலும் மண்ணைப்பறிச்சு அ ள் ளி ப் போட்டிருக்கேன். இங்கே ஒவ்வொரு தென்னையையும் நட்டது இந்தக் கைதான். ரா இல்லை பகல் இல்லை இந்தக் கமலையில் நான் இரைச்சிருக்கும் தண்ணி ஒரு ஏரிகொள்ளும். ஒண்ணும் வீணாவல்லே. மரமாகி, திருப்பிக் கொடுக்குது; கொடுத்துக்கிட்டேயிருக்குது.

என்ன கொடுத்தால் என்ன? இப்பவே ஆறுகுளு வானாச்சு. ஆண்டவன் சித்தம் இன்னும் எத்தினியோ? அரசாங்கம் அதுக்குள் என்னை ஜெயிலில் பொட்டுடுதோ எ ன் ன .ே வா ? மூணுக்குமேலே யி ரு ந் த ல் சிறை அஞ்சுக்கு ஆயுள் தண்டனை” கண்ணைச்சிமிட்டினான்.

சட்டம் வந்துட்டா, ந |ா ன் எ ன் ன ஆவேன்? செந். தாமரை மூனுமாதமா முளுவல்லே, கண்ணைச் சிமீட்டுகிறான். ‘மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான் அவன்விட்ட வழி'ன்னு நான் சும்மாயில்லை. ஆனால் பத்துப் பேருக்கும் பங்கானால் பாற்கடலும் பத்தாதே ! இப்போ ஒரு பெருமாள் படுத்திட்டிருக்கார் உலகத்தைக் காப்பாத்தறார். பத்துப் பெருமாளுங்களைப் படுக்க விட்டுப்பாரு, பாலும் கொள்ளுமா,இடமும் கொள்ளுமா?