பக்கம்:கழுதை அழுத கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യന്മഭൂഗു മഞ്ജു്

நாடி அடங்காமல்

உள்ளம் நடுங்கிற்றாம்!

'காளையண்ணே! வந்த

கடுந்துயரைப் பார்த்தீரா? 735 நாளை-இன்று என்றபடி

நான்பொழுதைத் தள்ளுகையில் என்றன் பிடரியின்மேல்

ஏறி யழுத்துமொரு குன்றுபோல் துன்பம்

குவிந்ததனைக் கண்டிரோ?

கண்ணுக்குக் கண்ணான

காதலனை அன்றிழந்தேன்!

மண்ணான வாழ்க்கைக்கென்

மன்னவன்தான் தந்துசென்ற 740

பெண்ணரசை இன்றிழந்தேன்!

பின்னும் பிழைப்பென்ன?

உண்னுமொரு வாய்ச்சோறும்

சாணி உருண்டையன்றோ?

என்னைத் தடுக்காதீர்;

ஈதோ, இவ் வோடையிலே

என்னுயிரைக் கொன்றுகொள்ள

யான்துணிந்தேன்” என்றுரைத்தே,

எம்பிக் குதித்தோட,

காளை எதிர்ந்தோடி, 745

73 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/114&oldid=666327" இலிருந்து மீள்விக்கப்பட்டது