பக்கம்:கழுதை அழுத கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഗുണ്ടൂ ു്

"சேட்டுக் குழந்தைபோல் சீராட்டிப் பாராட்டிக்

கொஞ்சி வளர்க்கப் படுவதுவும் கூறுவதோ ?!...” (68-69)

எனவும்,

இடையில் வந்து நட்புகொண்ட காளை - குட்டிக் கழுதையின் தோற்ற எழில் நலத்தை அக் குட்டியின் தாய்க் கழுதையிடம் வியந்து சுட்டுமிடத்தில், -

"ஆகா உன்பிள்ளை அரபிக் குதிரைபோல்

தோற்றமளிக் கின்றாளே” (278-280)

எனவும், வருவன - அவ் அழகிய பதிவிடங்கள்!. கருத்தின்முன் கருச் செய்தி!

செய்தியைச் சொல்லும்போதே - அச் செய்தியுள் கிடக்கும் கருவைச் சூழ்ந்துள்ள உருவும் திருவும் புலனாகுமாறான வெளிப்படுத்தம் - எழுத்தாக்க வினைமுறையில் நம் ஐயா அவர்களுக்குக் கைவந்த கலையாகும்! அது மிக நுண்ணுட்பமான வீச்சு அமைவுடையது "காந்தும் இளமையெழும் கன்னிப் பருவத்து" (20) என வரும் ஒரேயோர் இடத்தை மட்டும் ஒருசோற்றுப் பதனாக இவ்விடத்தில் நாம் கருதிப் பார்க்கலாகும். கன்னிப் பருவம்' எனலோடு அடங்காது - உடன் இளமையைச் சுட்டுதலும், அவ் இளமை எழுச்சியுறுதலை அதனொடு பிணைத்துச் சுட்டுதலும் (.இளமையெழும்..), அக் கன்னிப்பருவம் ஆடவ ராகியோர் உள்ளத்தை - உணர்வைப் பற்றியிர்க்கும் பான்மையுடைமையைக் குறிக்குமாறு "காந்தும்" எனுஞ் சொல்லை முற்படுமாறு முகப்பிற்பூட்டலும் ஐயா அவர்களின் தனிஇ இயல்புத் திறங்கள்.

ينيبيرت) 55سس.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/16&oldid=665319" இலிருந்து மீள்விக்கப்பட்டது