பக்கம்:கழுதை அழுத கதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の@の22う ごr@22う óの2多

ஒக்கவே ஆயிரத்தில்

ஒன்றா கிலும் நமக்கு வாய்த்திருக்கு மானால்

வளர்மகளே! நம்வாழ்க்கை 165 காய்த்துக் குலுங்கும் .

கனிமரமாய் நின்றிருக்கும்! பூத்துக் குலுங்குகின்ற

பூச்செடிபோல் வாழ்விருக்கும்!

காத்துக் கிடக்கின்ற

பட்டாளக் காவலிடைத் திண்கால் அரியணையில்

தேர்ந்த அறி. வாளரிடை வெண்குடைக்கீழ் விற்றிருக்கும்

வேந்தனைப்போல் நானிருப்பேன்! 170

அப்பெருமை என்ன?

அருமையென்ன? நாம்பெற்ற இப்பாழ் பிறவிபோய்

ஏழ்பிறவி கண்டாலும் மாடாய்ப் பிறக்குமொரு

மாண்புவந்து வாய்த்திடுமோ? வாடாத மேனியுடன்

வாழ்ந்திருக்க மாட்டோமா?"

-என்றபடி தாய்க்கழுதை

ஏங்கிடவும்; குட்டியோ, 175 "என்னதான் அப்பெருமை?" என்றே வினவிற்று.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/57&oldid=665414" இலிருந்து மீள்விக்கப்பட்டது