பக்கம்:கழுதை அழுத கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഗുണ്ടൂ ു്

சப்புச்சப் பென்றுவாய்

சப்பிச் சலித்துவிட்டே,

"இப்பொழுது சொன்னாயே,

என்னை அரசியென ஆக்குவேன் என்றாயே,

அப்படிஎன் றால்என்ன?” என்று வினவிற்று!

ஏக்கமுறத் தாய்க்கழுதை, 230 "என்னவென்றா கேட்கின்றாய்?

என்னவென்று நானுரைப்பேன்!

பொன்னும் பொருளும்

புதுப்பட்டுச் சேலைகளும் மின்னும் அழகிருக்கும்! மேனி பளபளக்கும்! மஞ்சள் குளிப்பிருக்கும்!

மாண்பு மிகுந்திருக்கும்! துஞ்சும் படுக்கையெலாம்

தூசகன்ற பஞ்சுமெத்தை! 235 கொஞ்சலென்ன! கூத்தென்ன! கோடி வணக்கமென்ன!

பஞ்சை வயிற்றுக்குப்

பாலென்ன! சோறென்ன..!

காய்ந்த அறுகம்புல்,

கண்டுவந்த நீயினிமேல்

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/62&oldid=665425" இலிருந்து மீள்விக்கப்பட்டது