பக்கம்:கழுமலப்போர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஆக, இதுகாறும் கூறியவற்றால், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆனிறைகளை மீட்கவும், பகைவர் கைப்பற்றிக் கொண்ட தம் நாட்டை மீட்டும் பெறவும், பகைவரால் வளைத்துக் கொள்ளப்பட்ட தம் கோட்டைகளைக் காக்கவும், தன் ஆற்றல் காட்டவந்து அழிவு விளைக்கும் அயல் நாட்டானை அடித்துத்துரத்தவுமே தமிழர்கள் படையெடுத்தனர். ஆகவே அவர் போரெல்லாம் தற்காப்புப் போரே; தமிழர் வலியச் சென்று பிற நாடுகளைத் தாக்கியவரல்லர்; ஆனால் வலிய வந்த போர்களை விடாது வெற்றி கண்டனர் என்ற உண்மைகள் புலனாகி, போர்க்களத்திலும் அறம் பிறழாத் தமிழர்களின் தலையாய நாகரிகம் நிலை நாட்டப்பட்டதாம். மேலும் தமிழ் நாட்டுப் போர்கள், இயற்கையின் தேவையை அடிப்படை யாகக் கொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக வளர்ந்து இடம்பெற்ற முறையும் விளங்கி நிற்றல் அரிக.

2. போரிட்ட வேந்தர்

மிழ் நாடு வயல் வளத்திலும், வாணிக வளத்திலும் சிறந்து, உலக அரங்கின் உயர்ந்த இடத்தில் அமரப் பெருந்துணை புரிந்தவர், அத்தமிழ் நாட்டை அன்று ஆண்டிருந்த முடியுடைய மூவேந்தர்களே என்றாலும், அத்தமிழ்நாடு, இன்று தாழ்ந்த நாடாய்த் தளர்ந்து போனமைக்கும் அவர்களே காரணமாவர். மூவேந்தர்கள் மொழியை முன் நிறுத்தி ஒற்றுமை உள்ளம் கொண்டு உலகாள்வதற்கு மாறாக, சேரர் சோழர் பாண்டியர் என்ற குலப் பெருமையே குறிக்கோளாய் ஒற்றுமையைக் குலைத்து, வேற்றுமையை வளர்த்து வந்தனர். மூவேந்தர் குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும், பிறரை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணத்தோடே பிறந்தனர். ஒரு குலத்தில் ஒரு காலத்தில், ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் பிறந்து விட்டால், அவன் பிற இரு குலத்து அரசர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/24&oldid=1377017" இலிருந்து மீள்விக்கப்பட்டது