பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கவிக்குயில் சரோஜினியின்

அந்த நினைவுக்கு ஏற்ப, தற்போது கவிக்குயிலுக்குத் தேசத் தொண்டு என்ற வடுக்காயத்தை நெஞ்சு நினைவுபடுத்தியது. அந்த நினைவுச் சிந்தனை பம்பாய் நகர் வந்ததும் அடிக்கடி அவருக்கு எழுவது உண்டு.

பெற்றதாயினும் சிறந்த தாய் நாடு, வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதும், நெஞ்சிலே உரமற்றவர்கள் நேர்மைத் திறனற்ற ஏழை மக்கள் வயிற்றுக்குத் திண்டாடுவதும், அந்த விடுதலைப் போருக்கு ஏழை மக்கள் எழுச்சி பெறாமல், தானுண்டு வயிறுண்டு என்று வாழ்வதும் சரோஜினியின் நெஞ்சத்தைத் தாக்கின. அதற்காக பம்பாய் நகரிலே சிந்தித்துக்கொண்டே இருந்தார்.

“The never Sunset in British Empire” என்று உலகம் கூறக்கூடிய சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராச்சியக்காரன், மிகவும் பலம் பொருந்திய பகைவன்

அந்த தந்திர விரோதியை எதிர்த்து, இந்திய நாட்டின் சுயராச்சியத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தியாகிகளையும், பொதுமக்களையும், அறிஞர்களையும், அவர்தம் ஆகிய உழைப்புத் திறன்களையும் எண்ணிப் பார்த்தார் சரோஜினிதேவி.

மாபெரும் சாம்ராச்சியபதிகளான வெள்ளையர்கள், ஒரு காலத்தில் ஆட்டுத் தோலுக்கு இடம் கேட்டு அலைந்த வியாபாரக்கம்பெனி ஊழியர்களாக இருக்கலாம். ஆனால், இப்போது:

ரத, கஜ. துரக, பதாதிகள் என்ற நால்வகைப்படைகட்கு மட்டும் அதிபதிகள் அல்லர்; அவர்களது அதிகாரம் என்ற சூரியன் உதிக்காத நாடுகள் இல்லையே!

இத்தகைய ஒரு சாம்ராச்சியாதிபதிகளை எதிர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவது எளிய, சுலபமான பணியா? சரி, சுலபமான வேலை ஆல்ல என்பதால், இந்தி-