பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

39

இந்த நேரத்தில், 1918ம் ஆண்டு, தமிழ்நாட்டிலே உள்ள காஞ்சிபுரத்தில் தமிழ் மாநில அரசியல் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாடு அன்னி பெசண்ட் அம்மையாரது இயக்கமான சுயாட்சி இயக்கத்தினரால் நடத்தப்பட்ட மாநாடாகும்.

அந்த அரசியல் சுயாட்சி கட்சி மாநாட்டிற்குக் கவிக்குயில் சரோஜினிதேவி தலைமை வகித்தார். அந்த மாநாட்டில், அவர் வீர முழக்கமிட்ட பேச்சு வருமாறு:

வீரர்களை ஈன்றளிக்கும் இந்தியத் தாய்மார்களே! பகையை விளையாட்டாக எதிர்த்து விளையாடிடும் பக்குவமுள்ள பாலகர்களைத் தோற்றுவிக்கும் பெண் குலமே! ஜான்சி ராணியின் வீரத்தை அவரவர் வயிறுகளிலே சுமந்து கொண்டிருக்கும் வீரத்தின் விளைநிலங்களே! இளைஞர்களே! சகோதரர்களே!

என்னை வரவேற்றுப் பேசிய நண்பர், சொல்லிலே இனிமையைத் தவழவிட்டு தீஞ்சுவைக் கவிதைகளைப் பாடிவரும் கவிக்குயில் என்றார். அது உண்மை தான்! ஆனால், நான் இப்போது அப்படியெல்லாம் பாடி, கல்வியாளர்களையும், ரசிகர்களையும் மகிழ வைப்பதை மறந்து விட்டேன்! என் மனம் அவ்வாறு செய்ய மறுத்து விட்டது. ஏன் தெரியுமா?

"நம்முடைய பாரதத் தாய் அந்நியர்களான ஆங்கிலேயர்கள் இடையே அடிமைப்பட்டு அவதிப்படுகின்றாள்! பெற்ற தாயினும் சிறந்த நமது அன்னை நாடு. வெள்ளை அராஜகவாதிகளிடம் கட்டுண்டு, தறிகெட்டு, நிலைகெட்டு, குலைந்திருப்பதை ஒரு கணம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?"

"திலகர் பெருமான், ஞானமகான் கோகலே, அயல் நாட்டு அன்னை அன்னி பெசண்ட், பண்டித மோதிலால் தேரு, புரோஷாய் மேத்தா, புலாபாய் தேசாய், சர்.