பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கவிக்குயில் சரோஜினியின்

செதல்வாட்டு, வ. உ. சிதம்பரம் பிள்ளை, திரு. வி. கலியாண சுந்தரம், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், ஈ.வி.ஆர் ராமசாமி போன்றவர்கள் ஓயாத போராட்டத்தில் குதித்து விட்டார்கள்."

தியாகிகள், அறிஞர்கள், நாடக நடிகர்கள், கலைஞர்கள், அடிமட்ட வறுமையிலே நாள் தோறும் அவஸ்தைதைகளை அனுபவிக்கும் கீழ்மட்ட ஏழைகள் உட்பட்ட எல்லாருமே அவரவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டுச் சிறை செல்கிறார்கள;

மானத்தோடுதான் வாழவேண்டும் மனிதப் பிறவி என்பதை-நீங்கள் அறியாதவர்கள் அல்லர்! அதனாலே தான் எந்த லாப நட்டத்தையும் பாராமல் விடுதலை வேள்வியிலே சுடர்விட்டெரியும் நெருப்பிலே குதித்து விட்டார்கள்.

எனது நாக்கு கவிபாடிய நாக்குதான்; ஆனால் இன்று, அக்கவிகளிலே கனற் கட்டிகளை (நெருப்பை) ஏற்றிப் பாடி வருகிறேன்? ஏன் தெரியுமா? சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரமே நமது பிறப்புரிமை என்பதை மக்கள் நெஞ்சங் களிலே நிலைநாட்டத்தான்.

நான் எழுதிய அனல் கட்டிக் கவிதைகள், பிரிட்டிஷ் பகைவர்களைச் சுட்டுக் காயமாக்கி அருகிறது. பொறாமை பற்றியோரைப் பொசுக்கி வருகிறது.

அதனால் வெள்ளை அராஜகவாதிகள் என்னைச் சுதந்திரப் போராட்டக் களத்திலே இருந்து எப்படி வெளியேற்றலாம் என்று திட்டமிட்டு வருவதாகக் கேள்விப்படுகின்றேன்.

விடுதலைப் போராட்டத் தலைவர்களிடம் நான் பழகக் கூடாது; பேசக்கூடாது; அவர்கள் சம்பந்தமே எனக்குத் தொடரக்கூடாது என்பதற்காகத்தான், ஆங்கில அரசு