பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

41

எனக்கு விருது அளித்துப் பாராட்டியதாக மந்திரி மாண்டேகு கூறியுள்ளார்.

கவிபாடும் குயிலுக்கு விடுதலைப் போர்க்களத்தில் என்ன வேலை? குழலும் யாழும் வாசித்து மக்களை மகிழ்விப்பதல்லவா ஒரு கவியின் பணி! அதை மறந்து சுயராச்சியப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று எங்களுக்கு எதிராக அறை கூவலிட்டு அழைப்பதா ஒரு பெண்கவியின் வேலை?

உலகம் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான், தாகூருக்கு பெருமைபடுத்தி அளித்த அதே விருது பதக்கத்தையே சரோஜினி தேவிக்கும் வழங்கினோம்; அதற்குரிய நன்றியா எங்களை வசைபாடுவது? அழகா? என்றெல்லாம் ஆங்கிலேயர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆங்கிலேயர்களே! உங்களது விருதுக்கு நான் ஆசைப்பட்டவள் அல்லள்! வலிய வந்து நீங்களே என்னைப் பாராட்டி விருது வழங்கினீர்களே அல்லாமல்-நானா உங்களைக் கேட்டேன்?

விருது கொடுத்துப் பாராட்டிய பதக்கத்துக்கா எனது தாய் மண் மானத்தை அடகு வைப்பேன்? அவ்வாறு கனவு காணாதீர்கள். சரோஜினி உங்களுடைய பட்டம் பதவிகளுக்கு மயங்கி விடுதலையை விலை பேசிடுவாள் என்று எண்ணாதீர்கள்! எனது மூச்சு போகும்வரை பாரத் மாதாகீ ஜெய் என்ற கோஷம் போடுவேனே தவிர, வேறு எதற்கும் உங்களிடம் அஞ்சேன் என்று வெள்ளையர்கள் கேள்விகளுக்கும் பதில் கூறினார். அவர் மேலும் தன்னைப் பற்றியும், தனது கவிதைகளைப் பற்றியும் ஒரு தன் நில விளக்கம் தந்துப் பேசியதாவது:

“ரோஜா பூக்கள் மணக்கும் தோட்டத்துக்கு நடுவே, விண்ணளாவும் கோபுரத்தின் மீது தனியாக உட்கார்ந்து