பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

49

★ கூட்டத்தில் பாதியளவுக்கு மேல் கலந்துகொண்ட ஆங்கிலேயர்கள், வெட்கத்தால் முகம் கருகித் தலை குனிந்தார்கள்.

இந்திய அரசு பற்றி பிரிட்டிஷ் மக்களுக்கு இருந்த நல்லெண்ணத்தைச் சரோஜினி பேச்சு தவிடுபொடியாக்கி விட்டது.

பிரிட்டிஷ் மந்திரி சபையில் அப்போதைய இந்திய மந்திரியாக இருந்தவர் மாண்டேகு என்பவர். கவிக்குயில் பேச்சு இங்கிலாந்து மக்களிடையே ஒருவித அதிருப்தியை பிரிட்டிஷ் அரசு மீது உருவாக்கி விட்டதை அவர் நேரிடையாகவே பார்த்தார்.

அதனால், கவிக்குயில் சரோஜினி நாயுடுவுக்கு மாண்டேகு நேரிடையாகவே ஒரு கடிதம் எழுதினார் அந்தக் கடிதத்தில் அவர் எழுதியதாவது:

★ "பஞ்சாப் மாநிலத்தில், இந்தியப் பெண்கள் நிர்வாணமாய் நிறுத்தப்பட்டார்கள், கசைகளால் அடிக்கப்பட்டார்கள் என்றேல்லாம் ராணுவ அதிகாரிகள் மீது தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை.”

★ “அரசாங்கம் நியமித்த ஹண்டர் கமிட்டியில் இதைப் பற்றி ஒன்றும் இல்லை. காங்கிரஸ் விசாரணைக் குழுவின் அறிக்கையிலும் ராணுவ அதிகாரிகள் பெண்களை மானபங்கம் செய்ததாய்க் கூறப்படவில்லை.”

★ “எனவே, தாங்கள் கிங்ஸ்லி ஹாலில் பேசியபேச்சு சற்றும் ஆதாரமற்றது; ராணுவ அதிகாரிகள் மீது கூறிய குற்றச்சாட்டுக்களைத் தாங்கள் உடனே வாபஸ் பெற்று, மன்னிப்புக் கோரவேண்டும்” என்றார் மாண்டேகு.

மந்திரி மாண்டேகு சிறந்த ஒரு ராஜதந்திரி என்று பெயர் எடுத்தவர். அவருக்கு கோகலே போன்ற இந்தியத்