பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54

யிட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலின் ஒட்டக்கூத்தர் பெயர்க்காரணம் பின்வருமாறு சுட்டப் படுகின்றது.

  • அவர் (ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டோடு பெற் றிருந்த தொடர்பு காரணமாக ஒட்ட (ஒரிசா நாட்டு) என்ற அடையுடன் ஒட்டக்கூத்தர் என வழங்கப் பெற்றார். 8 முதற் குலோத்துங்கனின் கலிங்க வெற்றிக்குப் பிறகு, தமிழர் கலிங்க நாட்டோடு - ஒரிசாவோடு நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடும். எனவே அம்முறையில் சோழ மன்னர்களின் அவைக் களப் புலவராக வும், ஆசிரியராகவும், இலக்கியச் செம்மலாகவும் விளங்கிய ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டிற்குப் பன்முறை சென்று வந்திருக்கலாம். அதுவும் அரசியற் பணியின் பொருட்டுச் சென்று வந்திருக்கலாம். இக்காரணம் பற்றி இவர் ஒட்டக்கூத்தர்' என்று அழைக்கப்பட்டார் என்னும் டாக்டர் மு. வ. அவர்கள் கூற்று ஆய்வுக்குப் பொருந்துவதே

யாகும.

2. ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர்

சேலேய் விழிமடவாரில் செங்கா லன்னம்சேர் பழனப் பாலேய் மணவயிற் கூத்த.' என்னும் தனிப்பாடல் ஒன்று கொண்டு, இவர் மணவை' எனும் ஊரினர் என்பர். இம் மணவை என்னும் ஊர்

  • மனக்குடி' யாக இ ரு க் க ல ா ம் என்று கொண்டு, அவ்வூரினைத் திருத்துறைப் பூண்டிக்கு எட்டு மைல் தொலைவில் உள்ள ஊராகக் கருதுவர். இவ்வூரில்

இன்று ம் செங்குந்தர்கள் மிகுமியாக வாழ்கின்றனர். மேலும், இவ்வூரின் மேலைத் தெருவின் வடபுறம் ஒட்டுக் கட்டடம் ஒன்று உள்ளது. இதுவே கூத்தர் பிறந்த இல்லம் என்று கருதுவர்.

88. தமிழ் இலக்கிய வரலாறு : பக். 157.