பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58

கடிபவர் ...புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தருக்குப் பிறகு சில நூற்றாண்டுகள் கழித்து வந்தவர்.' இனி, இதுகுறித்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம். ஒட்டக்கூத்தனெனப் பெயர் தரித்த புலவனொருவன்

ஏதோ கவிகள் பாடி வந்ததைக் கேட்ட தத்துவப் பிரகாசர் என்ற புலமைப் பெரியார்,

பறியாரோ நின்வாயிற் பல்லதனைப் பாரோர் முறியாரோ நின்முதுகின் முள்ளைச்-சிறியவொரு மட்டப்பேர் போதாதோ வாக்கிதுவே யானக்கால் ஒட்டக்கூத் தன்றா னுனக்கு." என்று கூறியுள்ளதாகப் பாடல் ஒன்று தமிழ் நாவலர் சரிதையிற் காணப்படுகின்றது.

இப் பாடலால் ஒட்டக்கூத்தர் தம் புலமைச் சிறப்பும், போலிப் புலவர்களைக் கண்டிக்கும் திறமுமே விளங்கு கின்றன.

அடுத்து, பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல்பே தாட்டுக் கடற்புலி யஞ்சலன் றோவறுத் துக்கிடந்த சூட்டுக் கதிர்க னிலத்தடங்கா மற் றொகுத்துமள்ளர் மேட்டுக் குவாலிடும் பொன்னிங்ண் னாடுடை

வேற்கண்டனே. என்னும் பாடல் தமிழ் நாவலர் சரிதையிற்" காணப்படு கின்றது. இப் பாடலின் கொளு, அது கவிகளை அறுத்த போது புலவரெல்லாம் வெகுள, ஒட்டக்கூத்தர் பாடியது" என்று அமைந்துள்ளது.

இப்பாடலுக்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதியுள்ள குறிப்பு வருமாறு :

91. தமிழ் இலக்கிய வரலாறு : பக். 157, 158. 92. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு : 235. 93. பாட்டு : 129.