பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

" பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும்

க் குடக்கூத்தும் ஆடினார்' ஆடிக கு -இராசராச: 338

கண்ணன் ஆய்ச்சியரது துகில்களைக் கொண்ட செய்தியை

-தோகையர் நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாகின் பொற்றுகில் தந்தருளிப் போதென்பார்'

-குலோத்துங்க: 218

என்றும், கண்ணபிரான் நாரதருக்குப் பதினாயிரம் திருவிளையாடல்களைக் காட்டிய நிகழ்ச்சியை,

-மாதவத்தோன் சார்ந்த பொழுதனகன் தன்னை அறிவித்த

ந்துரை யந்தப் புரம்போன்றும்' 낳, த -விக்கிரம; 92 என்றும், கண்ணன் இரு மருதமரங்களை வீழ்த்திய செயலை,

  • ஒருதன் அடியின் மடிய வுபய

மருது பொருத வயவன்.'

-குலோத்துங்க. 155 என்றும் கூறுகிறார்.

கூத்தரும் வருணனையும்

கவிஞர் கள் உள்ளதை உள்ளவாறே படம்பிடித்துக் காட்டும் ஓவியக்காரர்கள் அல்லர். அவர்கள் தம் மன உந்துதலால் அழகிய வருணனைகளைப் படிப்பவர் மனம் இன்புற அமைக்கின்றனர். கூத்தரின் வருணனைகளும், கற்பனைகளும் நம்மை இன்பக் கடலில் ஆழ்த்துகின்றன. சுடர் க் கதிரோன் எழுந்ததும் ஆய வெள்ளமும் தலைவியும் சோலையில் வருதலைக் கண்டு மானினம் மருண்டு ஓடின. அன்னமும் சேவலும் விழித்தெழுந்து ஆரவாரித்தன. மஞ்ஞைகள் ஆசையோடு ஆடின. அவற்றின் ஆட்டத்திற்குத் தகுந்தாற்போல் கிளிக்குலம்'