பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அடுத்து, நிலங்ாவிற் றிரிதரூஉம் நீண்மாடக் கூடலார்

புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ

பலனாடு நெஞ்சினோம் பரிந்து நாம் விடுத்தக்கால்

சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை "' என்ற கலித்தொகைத் தொடர்கள் கொண்டு பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் தமிழ்க் கவிதைக் காதல் கொண்டு நின்ற வேட்கைத் திறத்தினை வெளிப்படையாக அறியலாம்.

இச் சங்க காலத்தினை யடுத்துவந்த களப்பிரர் காலத்தில் தமிழிலக்கிய வளர்ச்சி தடைப்பட்டது. பல்லவர் காலத்தில் பக்தி இலக்கியங்களும் கலைகளும் பரவிச் செழித்தன. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தஞ்சையைச் சுற்றியிருந்த பகுதிகளை ஆண்ட முத்தரையர் களிடமிருந்து விசயாலய சோழன் ஆட்சியைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பேரரசுக்குத் தோற்றுவாய் செய்தான். பின்னர் வந்த பராந்தக சோழன், ஆதித்த கரிகாலன் முதலான அரசர்களால் மேலும் விரிவாக்கப்பட்டு வளர்க் கப்பட்ட பேரரசு, முதலாம் இராசராசன் காலத்தில் உயர்நிலை பெற்றது. அவன் மகன் முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் கங்கை வரையிலும் சோழர் வெற்றிக் கொடி பறந்தது. முதலாம் இராசராசன் தஞ்சைப் பெரு வுடையார் கோயிலைக் கட்ட, தன யனோ தன் வடநாட்டு வெற்றியினைப் பாராட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தான். இவர்களுக்கும் பின்னால் வந்த விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் முதலிய மன்னர்கள் காலத்தில் ஆட்சிச் சிறப்பும், இலக்கிய மேம்பாடும் சீரிய இடம் பெற்று விளங்கின.

சோழ மன்னர்கள் வீரமும் வெற்றித் திறனும் வாய்ந் திருந்ததோடு, சமயம், இலக்கியம், கலைகள் முதலியன

4. கலித்தொகை, பாலைக்கலி, 34, 17-20.