பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7.

வற்றின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை காட்டினார்கள். இவர்கள் ஆட்சியின் எல்லை வடக்கிலும், தெற்கிலும், துரக் கிழக்கு நாடுகளிலும் பரவின. சாவகத் தீவோடு இவர்கள் கொண்ட நட்புறவும், வாணிபத் தொடர்பும், கலைத்தொடர்பும் இன்றும் ஒரளவு விளங்கக் காணலாம். சீன நாட்டிற்கொரு துாதுக்குழு சோழ மன்னர்கள் காலத்தில் சென்றது. சோழ மன்னர்கள் தமிழ்ப் புலவர் களைப் பெரிதும் போற்றினர். * புலவர் பாடும் புகழுடையோ ராக விளங்கினர். மன்னர் சிலர் இலக்கியப் படைப்பாளர்களாகவும் சிறந்திருந்தனர். க ைல க ள் களிநடம் புரிந்த காலம் இக்காலம் எனலாம். சோழ மன்னர்களின் கட்டடக் கலைச்சிறப்பினைத் தஞ்சையில் கி. பி. 1012 ஆம் ஆண்டில் முதலாம் இராசராச சோழனால் கட்டப்பெற்ற பிரகதீசுவரர் கோயிலில் காணலாம். வானளாவிய கோபுரங்களுடன் பெரிய திருக்கோயில்கள் சோழர் திருப்பணியின் விளைவே எனலாம். தமிழ் இசை இவர்கள் காலத்தில் உயர்நிலை பெற்றிருந்தது. சோழ மன்னரான கண்டராதித்தரே திருவிசைப்பாவில் சில பாடல்களைப் பாடியிருக்கக் காணலாம். தேவாரப் பாடல்களை நாடோறும் திருக்கோயில்களில் முறையாக ஒதி வருவதற்குச் சோழ மன்னர்கள் செய்திருந்த விரிவான ஏற்பாட்டினைக் கோயில் கல்வெட்டுகளில் காணலாம். தேவார ஒதுவார்கள் தம் இசைத் தொண்டிற்குப் பெற்ற மானியங்களைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட் டொன்று குறிப்பிடுகின்றது. முதலாம் இராசேந்திர சோழன் நலிந்து கொண்டு வந்த நாடகக் கலைக்குப் புத்துயிர் கொடுத்தான். இராசராச நாடகம்' என்னும் நாடகம் அவன் காலத்தில் முதன்முதலாகத் தஞ்சைப் பெரிய கோயிலில் அரங்கேற்றுவிக்கப் பெற்றது. திருநாறை பூர் நம்பியாண்டார் நம்பி சைவப் பெருமக்கள் பாடிய பாடல்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தார். வைணவப் பிரபந்த உரையாசிரியர்கள் தோன்றித் தம்