பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.இதுவன்றி, இன்னும் உள்ள
இடம், காலம், ஏவல் என்னும் -
எதுவொன்று தேவை என்றால்
இரண்டாக ஈவேன் அன்றே;
மதுவொன்றி மலர்ந்த இந்த
மலர்போலும் மணக்க, ஊரின்
புதுமன்றில் கந்தன் கோவில்
பொருந்தநின் றமைப்பீர்," என்றான்.


சிந்தித்துக் கவிஞன் மெல்லச்
செப்பினான்: "சிறுமை தீரக்
கந்தனுக் குலகில் முன்னோர்
கணக்கற்றுக் கட்டி வைத்தும்,
இந்தவூர் தனிலொன் றின்னும்
எதற்காகக் கோவில்? என்னை
நிந்திக்க வேண்டாம் ; நன்றாய்
நினைத்துநீர் பார்ப்பீர்!" என்றே.


"பல் நூறு ரூபாய் சேர்த்துப்
பாங்கியில் பதனம் பண்ணி,
கல்நூறு வண்டி கொண்டு
கட்டடம் கட்ட இட்டும்,
இல்நூறு சேர்ந்தெ டுத்த
இந்த கல் முடிவை மாற்றச்
சொல்நூறு ! சொன்ன போதும்
சுகப்பட மாட்டா" தென்றான்.

99