பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவு காளைகள் சோழவளநாடு சோறுடைத்து, என்பது பழ மொழி. சோழநாடு வளம் பெற்றிருப்பதற்குக் காவிரி யாறே காரணம். கினைப்புக்கும் எட்டாத நெடுங்கால மாக இவ்வாறு சோழ நாட்டை வளம்படுத்தி வந்திருக் கிறது. இன்றும் வளம்படுத்தி வருகிறது; இன்னும் வளம் படுத்திவரும் என்பதற்கு ஐயமில்லை. ஆறு பாயும் வெளிகளில் வாழும் மக்கள்தாம் நாகரீகத்தில் முதிர்ந்தவர்கள்; நாகரீகம் அவ்வெளிகளில் தான் அரும்பும். உலக வரலாற்றை ஆராய்ந்து பார்த் தால் ஆற்ருேரத்தில் வசிக்கும் மக்கள்தாம் ஏனேய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு நாகரீகத்தைத் தந்தனர் என்பது விளங்கும். தேம்ஸ் நதிக்கரையில் வாழும் ஆங்கிலேயர் உலகத்திலேயே ஒரு பெரிய பேரரசினை நிலைநாட்டி விட்டனர். ஆங்கிலேயர்களின் நாகரீகம் இன்று இவ் வுலகம் எங்கும் பரவியிருக்கிறது. வால்காயாறு பாயும் சமவெளியிலுள்ள ரஸ்ய மக்கள் இவ்வுலகத்திற்கே புதிதாய்ப் பொதுவுடமை க் கொள்கையைப் பரப்பி வருகின்றன்ர்: அக்கொள்கை இன்று அறிவுலகத்தையே கலக்கி வருகிறது; பகுத்தறிவைப் பரப்பி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/106&oldid=781497" இலிருந்து மீள்விக்கப்பட்டது