பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டைச் சேவியர் 109 குறிப்பு 'த் தெரியவரும். அம்பு ஒருகணநேரங்கூடத் தங்காது மிக விரைவில் போயிற்று என்பது பாவலர் பெறவைத்த குறிப்பு: பாவியின் உடலில் கொஞ்ச நேரங் கூடத் தங்கக் கூடாது என்று போனது போல் அம்டி மிகவிரைவாகப் போய்விட்டது என்பது பாவலர் கருதிய பொருள். இதனை வடமொழிப் புலவர் தொனி GTGGTLJfr. தாடகையின் மார்பில் இராமனது அம்பு ஊடுருவிச் சென்ற தன்மையைக் கூறவந்த கவிஞர் ஒட்டைச் செவியரின் கிலேயையும் ஒருங்கு உணர வைக்கும் பெற்றி படிப்போருக்கு இன்பம் தருகிறது. கவிஞரின் சொல்ஓவியம் வருமாறு : ' சொல் ஒக்குங் கடிய வேகச் சுடுசரங் கசிய செம்மல் அல் ஒக்கும் நிறத்த் ஞண்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று அன்றே!' - கம்பராமாயணம் (தாடகைவதைப் படலம், 71.) { சரம் - அம்பு; அல் - இருட்டு.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/127&oldid=781543" இலிருந்து மீள்விக்கப்பட்டது