பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 12 கவிஞன் உள்ளம் களாக இருந்தவை யாவும் உயர்ந்த நீர்ப்பூக்களே. அவிைகள் தமது காதலிகளுடைய உறுப்புக்களைப்போல் காணப்பட்டன. குவளை மலர்கள் கண்களை யொத் திருந்தன: தாமரைகள் முகங்களப் போன்றிருந்தன: குமுத மலர்கள் வாயிதழ்கள் போலிருந்தன. ஆகவே உழவர்கள் ஒன்றையும் தொடாது வயலில் உல்ாவி வீண் பொழுது போக்கினர்கள் ” என்று கூறுகிருர் கம்பர். அனுபவ நிகழ்ச்சி யொன்றை உறுதிபெற இக் காட்சியுடன் இணைத்திருக்கும் பெற்றி மிகநேர்த்தியாக விருக்கிறது. புதுமணம் புரிந்த இளைஞர்கள் தம் காதலி களிடம் பேராவல் உடையவர்களாய்ப் பெருகி நிற்பர் என்பது யாவரும் அறிந்த உண்மை அம் மங்கையர் மனம் கோனும்படி மறந்தும் அவர்கள் மீறி கடக்க மாட்டார்கள். இந்த உண்மையை உழவர்களின் செயலுடன் ஒப்புச் செய்து உரைத்திருக்கிருர் கம்பர். கம்பர் பாட்டு வருமாறு: ' பண்கள் வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர் பரந்து நீண்ட கண்கைகால் முகம் வாய் ஒக்கும் களையலால் களையி லாமை உண்கள்வார் கடைவாய் மள்ளர் கண்கிலாது உலாவி நிற்பார் பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்ருல்: - கம்பராமாயணம். பண்கள் வாய்மிழற்றும் இன்சொல் - பண்கள் போல இனிமையாக வாயினுற் பேசும் இன்சொற்களையுடைய, கடைசியர் - உழத்தியர்; பரந்து - அகன்று; உண்கள் வார் கடைவாய் - குடிக்கும் கள் ஒழுகா நிற்கும் வாயோாங்கள்ேயுடைய மள்ளர் - உழவர்; நேயம் - அன்பு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/130&oldid=781551" இலிருந்து மீள்விக்கப்பட்டது