பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம் காதலேயும் வீரத்தையும் கலேகளாக்கிவிட்டார் கள் தமிழர்கள். காதல் உணர்ச்சி விரவிவரும் நூல்களே அகப்பொருள் நூல்கள் என்றும், வீர உணர்ச்சி விரவிய நூல்களைப் புறப்பொருள் நூல்கள்' என்றும் கூறுவார்கள். பெரும்பான்மையான சங்கப் பாடல்கள் இவ்விரண்டு உணர்ச்சிகளைக் கொண்டேயிருக்கும். தமிழ் நாட்டுக் கவிஞர்கள் இவ்விரண்டு உணர்வு கிலே களே அழகு படுத்திப் பாடிய பாடல்களைப்போல வேறு எங்காட்டுக் கவிஞர்களும் பாடவில்லே யென்று சொல்ல லாம். சங்க இலக்கியங்களே நுனித்து ஆராய்பவர் கட்கு இவ் வுண்மை புலப்படும். காதல் என்ற சொல்லேக் கேட்டவுடன் அரு வருப்புக் காட்டும் மக்களும், வீரம்' என்ற சொல்லேக் கேட்டவுடன் பழித்துக்கூறும் மாந்தர்களும் இருக்கின் ருர்கள். காதல் என்ருல் அழகுடைய நங்கையொருத் தியைக் கூடிப் பெறும் இன்பம் ஒன்றே என்றும், வீரம் என்ருல் வலுச்சண்டைக்கிழுந்து வெற்றிகானும் இழிவான செயலே யென்றும் அவர்கள் கருதினர்கள் போலும் உயிர் இறைவனே நாடிக் கலக்க விழையும் ஆர்வமும் காதலே; இவ்வுலகில் அனுபவிக்கக்கூடிய பலவகை இன்பங்களையும் வெறுத்தொதுக்கித் துறவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/135&oldid=781561" இலிருந்து மீள்விக்கப்பட்டது