பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கவிஞன் உள்ளம் திருக்கோவையார் எ ன் பது, மாணிக்கவாசக சுவாமிகளால் செய்யப்பட்ட தேனூறும் செஞ்சொற் களால் அகப்பொருள் சுவையைக் குழைத்து செய்ய்ப் பட்ட பாக்களாலானது. சிற்றின்பத்தைக் காட்டிப் பேரின்பப்பேற்றை அளிக்கவல்ல ஒரு அரிய நூல். மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்குச் சிற்றின்பம் தரு வதாகக் காணப்பட்டாலும், ஊன்றிப் படிப்பவர்கள் பேரின்பம் பயக்கவல்ல ஆற்றலை உணர்வார்கள். இறை யும் உயிரும் கலப்பதைத்தான் த ல வ ன் தலைவியர் கூடும் கூட்டமாகக் கற்பனே செய்யப்பட்டுள்ளது. இத் தகைய சிறப்புப்பெற்றிருப்பதால்தான் திரு என்ற அடைமொழியை முதலிலும், ஆர்' என்ற சிறப்புப் பொருள் உணர்த்தும் இறுதி நிலையைக் கடைசியிலும் பெற்றுத் திருக்கோவையார் என்று வழங்கப்படுகிறது. களவு ஒழுக்கம் கழிந்தபின்பு தலைவி கற்பொழுக் கத்தில் ஒழுகி வாழ்ந்து வருகிருள். ஒருபோது செவி லித்தாய் தலைவியைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தாள். காதலர்களின் இன்ப வாழ்க்கையை நேரில் கண்டறி கிருள். இதனைத் தலைவியின் கற்ருய்க்குக் கூறுகிருள். “ அவர்கள் இரு வரும் இன்பவெள்ளத்தில் அழுந்தியிருக்கின்ருர்கள். பேரி ன் ப வெள்ளத்தில் அழுந்தியிருக்கின்ற ஓர் உயிர் அப்பேரின்பத்தை ஒருடம் பால் அனுபவிப்பிதில் அமைதிகொண்டு விரு ப் பம் நிறைவுருமல் இரண்டு உடம்புகளால் அனுபவிப்பதை ஒக்கும் அவர்கள் அனுபவிக்கும் இன்பம். அன்றியும், தில்லையில் எழுந்தருளியுள்ள ஒலிக்கும் கழலேயுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/138&oldid=781567" இலிருந்து மீள்விக்கப்பட்டது