பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்ப்படகு 125 பெண்ணுருவத்தில் மயங்குகிறவர்கள் யாவரும் காமச்சேற்றில் சிக்கிக்கொண்டு அல்லற்படுவது அணு பவவாயிலாக அறியலாம். எடுத்துக்காட்டுகள் எவ் வளவு வேண்டுமானலும் இன்றைய உலகில் காணலாம். இத்தகைய கொடிய காமத்தை சுருமீனக உருவகிக் கிருர்மணிவாசகர். கடலிலுள்ள சுரு:மீன் தன் வாய்ப் பட்டாருடைய ஊனுடலே மட்டிலும் தான் உண்னும்: உயிரை ஒன்றும் செய்யாது; செய்யவும் முடியாது. ஆனல் காமம் என்கிற சுருமீன் ஊன் உடலுடன் உயிரையும் சேர்த்து உண்ணும். அதனல் அதை வான்சுறவு என்று குறிப்பிடுகிருர், அதாவது காம மானது தீவினையாக நின்று வருகிற பிறப்பு க்க ள் தோறும் உயிரைத் துன்புறுத்தி வரும் எ ன் பது உள்ளொளி பெற்றவர் கண்ட உண்மை. பொதுவாக எல்லாப் பொருள்களின் மீது செல் லும் ஆசையைக் காமம் என்று குறிப்பிடுவது வழக்கம். என்ருலும், பெண்களைப்பற்றிக் குறிப்பதையே சிறப் பாகக்கொள்வார்கள் அறிஞர்கள். பெண்ணுசை காரண ம்ாக த்தான் ஏனைய பொன்னசையும் மண்ணுசையும் நிகழ்கின்றன். இவ்வாறு மாணிக்கவாசகர் அலேயால் மோதப் பட்டுக், காற்ருல் கலக்குண்டு, சுற்வின் வாய்ப்பட்டு, எப்படித் தப்பி’ உய்வது என்று எண்ணிய வண்ணம் இருக்கிருர், காமச்சுரு சிறிது விழுங்கியும் முழுதும் விழுங்காதிருக்கும் சமயத்தில் திருவருள் துணையால் ஐந்தெழுத்துத் தெப்பம்-உயிர்ப்படகு- அவருக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/143&oldid=781577" இலிருந்து மீள்விக்கப்பட்டது