பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான தண்டனை ! ஒருவுரை ஒருவர் ஏமாற்றுவதற்கும் கம்பிக்கை இழப்புச் செய்வதற்கும் கடுஞ்சிறை இருப்புக்கொடுக்க வேண்டுமென்று இந்தியன் பீனல் கோட் (The Indian Penal Code) என்ற சட்டத்தின் 417-வது பிரிவு கூறுகிறது. அரசியலார் ஒறுக்க மறுத்தாலும் அல்லது ஒறுத்தல் செய்யக் காலத்தாழ்ப்புச் செய்தாலும் பொது மக்கள் சட்டங்களைத் தங்கள் கைக்கொண்டு குற்றவாளி களுக்குப் பாடம் கற்பித்து விடுவார்கள். மக்கள் ஆட்சி க்டைபெறும் இன்றைய உலகில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிக இயல்பாக உள்ளன. மகாத்மா காந்தியின் மறைவு குறித்து காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் பல இவ்விதமானவை.

  • ※ 3. * * ' ** *

உலகில் பலதிறப்பட்ட நூல்கள் பல துறைகளி லும் இருக்கின்றன. இவற்றுள் இலக்கிய நூல்கள் தலே . சிறந்தவை என்பது அனுபவம். காட்டும் ஏனெனில், இலக்கிய நூல்கள் படிப்போருக்கு இன்பத் தைக் கொடுத்து அவர்களின் வாழக்கையைச் செப்பம் செய்ய வல்லன. இலக்கியத்தை உலகியல் இலக்கியம் என்றும் சமய இலக்கியம் என்றும் இருவகைப்படுத்த லாம். பொது மக்களுக்கும் சமயக் கொள்கைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/149&oldid=781591" இலிருந்து மீள்விக்கப்பட்டது