பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான தண்டனே! 苓 தார். அப்போது பிரம்மதேவனது எண்ணத்தாற் பிறந்த மிக்க்ளாகிய சனகர், சனந்தனர், சனதனர், சனறகுமாரர் ஆகிய நான்கு மறையவர்களும் மறைநூற் பொருளேயும் மறைமுடிவுப் (உபநிடதப்) பொருளையும் பெற்ருர்கள். பெற்றும் அவர்கள் மாயையினல் மெய்யுணர்வு நிலை பெற முடியவில்லே. பிறகு நெடுங்காலம் தவம் செய்து திருக்கைலாய மலேயை அடைந்து கந்திதேவரின் உதவி யால் சிவபெருமானரின் காட்சியைப் பெற்ருர்கள். தங்களால் மெய்யுணர்வுநிலை பெற முடியவில்லே என முறையிட்டுத் தங்கள் மதிமயக்கத்தை நீக்கும்படி வேண்டினர்கள். சிவபெருமானும் மறைமுடிவுத் துணிவுப் பொருளேத் தனியாக அற்றத்தில் செவியறி வுறுவிக்கத் திருவுளங்கொண்டார். தான் அப்பொருளே உணர்த்தும்பொழுது மன்மதனத் தவிர மற்றைய தேவர்களே உள்ளே விடுக்காதிருக்க கந்தி தேவருக்கு ஆணேயிட்டார்; கந்தி தேவரும் விழிப்பாக ஏமாரு திருந்து காவல் செய்து வந்தார். சிவபெருமாளுர் முனிவர்கள் கால் வருக்கு ம் தீவிய ஆகமங்களில் சொல்லப்படும் சரியை கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பிரிவுகளுள்ளும் முதல் மூன்றையும் செவியறிவுறுத்தியருளினர். முனி வர்கள் ஞானப்பிரிவினையும் செவியறிவுறுத்தியருளும் படி. வேண்டினர்கள். இது வாயினுற் சொல்லமுடியா தென்று கூறி அந்நெறியை உணர்த்தும்பொருட்டுத் தனது மார்பில் திருக்கரத்தைச் சேர்த்து சொல்லாக் குறியைக் (மெளன. முத்திரை) காட்டி, ஒரு கணம் ஒரு செயலுமின்றி யோகம் செய்வார்போல் எழுந்தருளி யிருந்தார். முனிவர்களும் தங்கள் மனம் ஒடுங்கி மூன்ற முக்கும் நீங்கப்பெற்றுச் சிவஞானத்தை அடைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/151&oldid=781597" இலிருந்து மீள்விக்கப்பட்டது