பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் அடங்கிற்று! 19 மென்று கொண்டிருப்பார்கள், பிறரைப்பற்றி ஏதா வது பேசாவிட்டால் இவர்களுக்குப் பொழுதே போவ தில்லை. இப்படிப்பட்டவர்களுக்குக் கொஞ்சம் அளல் கிடைத்தமாதிரி ஏதாவது விஷயம் கொஞ்சம் கிடைத் தாலும் போதும். அதுவும் காதல் விஷயத்தைப் பற்றிய சமாச்சாரம் என்ருல் சொல்லவேண்டியதில்லை. ஈறு பேணுகி, பேன் பெருமாளாகி விட்டது போன்ற கதையாகிவிடும். அவளது களவு ஒழுக்கம் அவளது பெற்ருேர் களுக்கும் எட்டிவிட்டது. அவளுக்குப் பலமான காவல் கள் வைக்கப்பட்டன. இதுவரையிலும் தனது இன் னுயிர்த் தோழியுடனும் ஏனைய பாங்கிமார்களுடனும் பூப்பரிக்க வயலுக்குச் செல்வாள்; அருவியாடிவரச் சுனக்குப் போவாள்; பொழிலாடச் சோலைக்குச் செல் வாள். இப்போதோ ஒரே கெடுபிடி'; பலமான இற்செறிப்பு . அவளால் வெளியில் செல்ல முடிய வில்லை. சதா மனம் புழுங்கிச் சோர்வு அடைவாள். இவளை எதிர்பார்த்து அடிக்கடி சோலைக்கு வந்து ஏமாற்றமடைந்து திரும்பும் அவனது கிலேயைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? இன்னுெரு தொல்லேயும் அவளுக்கு வந்து சேர்ந்தது. ஊரார் அலரைக்கேட்ட இபற்ருேர்கள் அவளது திருமணப் பேச்சைத் தொடங்கிவிட்டார்கள். தினந்தோறும் வீட்டில் கல்யாணப் பேச்சுதான். எப் படியாவது விரைவில் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்று அவனது பெற்ருேர்கள் உறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/37&oldid=781659" இலிருந்து மீள்விக்கப்பட்டது