பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கவிஞன் உள்ளம் தார்கள். ஒரு சமயம் அவள் அவர்களேப் பிரிந்திருக்கும் வாய்ப்பு வந்தது. தெய்வத் திருவருளால் அவன் அவளேத் தனிமையாகச் சந்தித்தான். எழிலும் உருவும் திருவும் பொருந்திய அந்த மடமங்கைக்கு ஏற்ற நாயகன்தான் அவன்; அழகுடையவன்; வீர முடையவன்; செல்வமுடையவன். அவனும் அவளே விரும்பினன்; அவளும் அவன் மீது காதல்கொண்டாள். இருவருக்கும் காதல் மனம் நடைபெற்றது. அன்று முதல் அவன் அந்த இடத் திற்கு அடிக்கடி வருவதும் போவதுமாக இருந்தான். காதல் விஷயங்களில் ஏற்படும் தொல்லைகளேயும் அல்லல்களையும் காதலர்கள்தாம் நன்முக உணரமுடியும். இந்த இடையூறுகளை எல்லாம் எளிதில் நீக்கி அவளுக்கு உதவி புரிந்தாள் அவளது இன்னுயிர்ப் பாங்கி. அவனும் தன் செயலுக்குத் தக்கவள் அவளே என்று தேர்ந்தெடுத்தான். கெட்டிக்காரன் குட்டு எட்டு நாட்களில் வெளிப் படும் என்பது யாவரும் அறிந்த ஒர் உண்மை. எப் படியே இக்களவு முறை ஒருவருக்குத் தெரிய அது ஊர் முழுவதும் பரவி விட்டது; ஒரே அலர். எங்கு ப்ார்த்தாலும் இதே பேச்சுதான். ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தோன்றியவாறெல்லாம் பேசலானர் 岛GT。 證 °, 珍 资源 சாதாரணமாக மக்களில் சிலர் வெறும் வாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/36&oldid=781657" இலிருந்து மீள்விக்கப்பட்டது