பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கவிஞன் உள்ளம் "திருமணம் செய்துகொள்” என்ற செய்தியைத் தோழி தலைவனிடம் குறிப்பிடும் நயம் உள்ளுதோறும் இன்பம் பயக்கிறது. தோழியின் கூற்ருக வரும் பாட்டு வருமாறு கோழ் இல் வாழைக் கோண்மிகு பெருங்குலே ஊழ்உறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த சாற் பலவின் சுளையோ டு.ழ்படு பாதை நெடுஞ்சுனே விளந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது தறுவி அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறியா இன்பம் எளிதின் நின்மலைப் பல்வேறு விலங்கும் எய்தும் நாட ! குறித்த இன்பம் நினக்கெவன் அரிய? வெறுத்த வேளர் வேய்புரை பணத்தோள் இரப்ப நல்ல நெஞ்சமொடு நின்மாட்டு இவளும் இனய ளாயின் தந்தை அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக் கங்குல் வருதலும் உரியை, பைம்புதல் வேங்கையும் ஒளிவினர் விரிந்தன; நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே. -அகீநானுறு, 2. (கபிலர், Pகோள் இலே - வளவிய இலைகளேயுடைய ஊழ்உறு முதிர்ச்சியுற்ற, சாரல் பக்கமலே; ஊழ்படு முற்றிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/60&oldid=781712" இலிருந்து மீள்விக்கப்பட்டது