பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான சூடு 45 அவர்கள் நூல்கள் இயற்றியும் தனிப்பாடல்கள் இயற்றியும் காலத்தை நல்ல முறையாகக் கழித்து வந்தார்கள். ஒரு சில புலவர்கள் தம்முடைய தாய் தந்தையர், மனேவி மக்கள் முதலியோர் பொருள் தட்டுப்பாட்டால் அல்லலுறுங்கால், அவர்களது துன்பத்தைப் போக்க, குறிப்பறிந்து கொடுக்கவல்ல உபகாரிகளிடம் சென்று பொருள் பெற்று தமது துன்பத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அவ்வப்போது அவர்களால் பாடப் பெற்ற ஒரு சில பாடல்களிலிருந்து இதனேத் தெரிந்து கொள்ளலாம். சங்க நூல்களிலிருந்து புலவர்களது வரலாற் றைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சில முக்கிய மான சம்பவங்களே அவர்களது தனிப்பாடல்களே தெரிவிக்கின்றன. புறநானூறு போன்ற சங்க நூல் களில் இம்மாதிரியான பாடல்கள் பலவற்றைக் காணலாம். பொறுத்தற்கரிய வறுமையிலும், துன்பத்திலும், அன்றைய புலவர்கள் தமது கிலேக்கு ஏற்காதனவும் இழிவான காரியங்களும் செய்யார்கள்; மானமே பெரிது என வாழ்ந்த பெரியார்கள் அவர்க்ள். இத்தகைய பெரியார் கூட்டத்தைச் சேர்ந்தவர் புலவர் பெருஞ் சித்திரனர். இவரது பாடல்கள் புற கானூற்றில் பல இருக்கின்றன. ஒரு சமயம் இப்புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/63&oldid=781719" இலிருந்து மீள்விக்கப்பட்டது