பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கவிஞன் உள்ளம் சகையில் சிறந்து விளங்கிய வெளிமான் என்ற அரச னிடம் சென்ருர். அப்போது எல்வரசன் தூக்கநிலையில் இருந்தான் தானே வெளியில் வந்து புல்வரை வர வேற்று பரிசல் வழங்க இயலாமல், தன் தம்பியைக் கூப்பிட்டு புலவருக்கு மரியாதை செய்தனுப்பும்படி ஏவினன். தம்பியோ உலோபத் தன்மையுடையவன்; புலவரது புலமையின் அளவறிய இயலாதவன். ஆகவே, அவன் சிறிது பொருளைப் பரிசிலாகக் கொடுக்கவந்தான். ஆனல் பெருஞ் சித்திரனர் அதனே ஏற்றுக்கொள்ளாது மறுத்து விட்டார். அவ்விடத்தை விட்டும் அகன்ருர். இப்புலவர் பெருமையை நன்கு அறிந்தவன் குமணன் என்னும் அரசன், உத்தம குணசாலி. புலவர் களே அவர்கள் தகுதியறிந்து போற்றும் இயல்புள்ள வன். அவனிடம் சென்ருர் பெருஞ் சித்திரனர். புலவரது திறமை நன்கு அறிந்தவனதலால், ஏராள மான பொருளேயும் ஒரு களிற்றி யானையையும் பரிசி லாகக் கொடுத்து மிக மரியாதையுடன் வழியனுப்பி வைத்தான். பொருளைப் பெற்ற புலவர் மீண்டும் வெளிமான் ஊருக்கு வந்தார். அவனது ஊர்க்காவல் மரத்தில் யானேயைக் கட்டி வைத்தார். வெளிமான் தம்பியை அணுகி, தான் குமணனிடம் பெற்ற பரிசிலே அவனுக் குக்காட்டி அவனே வெட்கமடையும்படி செய்ய எண்ணினர்; உலகத்தில் பொருளாலும் கல்வியாஅலும் மிக உயர்ந்து புகழொடு விளங்கும் அவன் அறியுமாறு காட்ட விரும்பினர். அங்ஙனமே,வெளிமான் தம்பியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/64&oldid=781721" இலிருந்து மீள்விக்கப்பட்டது