பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் ஊமன் அவன் பிறவியிலேயே குருடன், பிறவிக்குருடன். அவனுக்குப் பேசவும் தெரியாது; ஊமையன். ஒருநாள் அவன் கடற்செலவை மேற்கொண்டான். இவன் விரைவாகப் புறப்பாடு செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நடு இராத்திரியில், புறப்பாடு; அதுவும் மாரிக்காலத்தில். அது அவனது கெட்ட காலம்; திடீரெனப் புயல் வீசிற்று. கடல் கொந்தளித்தது. எத்திசையில் மரக்கலத்தைச் செலுத்துவது என்பது தெரியாமல் மாலுமி திகைத்தான்; செலுத்தவும் வசதியில்லை. இயற்கையை எங்ங்ணம் எதிர்க்க முடியும்? இக்காலக் கப்பல் போலிருந்தால் ஓரளவு சமாளித்துக் கொள்ள லாம். ஆனல் அது காற்ருல் செலுத்தப்படும் Լնք :5ՅՏննԼԸ. எப்படியோ கப்பல் கவிழ்ந்து விட்டது. ஒரு திட்டு அல்லது பாறையில் மோதியிருந்தால் மரக்கலம் உடைந்திருக்கும். சிதறிய மரத்துண்டுகளைப் பற்றிக் கொண்டு நீந்தத் தெரியாதவர்கள் நீந்தித் தப்பிக்கலாம். ஊமையனுக்கும் ஏதாவது ஒரு மரத்துண்டு கிடைத் திருக்கும் திசை தெரியாவிடினும் துண்டைப் பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/66&oldid=781725" இலிருந்து மீள்விக்கப்பட்டது