பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கவிஞன் உள்ளம் கையிலுள்ள் பந்தையும் கவர்ந்துகொண்டு, அவள் கட்டிய வீட்டையும் காலால் சிதைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் கம்பி நீட்டி விட்டான். ஆண்டுகள் பல சென்றன. அவனும் பாட்டி வீட்டை விட்டு தன்னுர் சென்று விட்டான். அவள் அவனே மறந்தாள்; ஆனால், அவன் மட்டிலும் அவளே மறந்துவிடவில்லே. வயது ஆக ஆக, அவளது பொறுப் புணர்ச்சிகளும் வளர்ந்தன. சிறிய வயதில் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாம் பழைய பாடங்களாய் விட்டன. அவளுக்குக் கல்யாணப் பருவம் நெருங் கிற்று. பொறுப்புள்ள பேச்சுக்கள் அன்னேயின் வாயி லிருந்து அடிக்கடிப் பிறந்தன. அவளும் பொறுப்புக் களே உணர்ந்து வரலாளுள். அவ்வூரில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா ஒன்று வந்தது. இத்திருவிழா விற்குப் பாட்டி அவனே அழைத்திருந்தாள். இப்போது அவன் ஒரு கட்டிளங்காளபோல் இருந்தான். அவனது பெற்ருேர் கல்யாணப்பேச்சு கடத்தி வந்த சமயம் அது. அவன் பாட்டி விட்டிற்கு வந்திருக்குங்கால், இளமை 36 தன்னுடன் விளையாடிய அவளது நின்வு வந்தது: அவன் அவளைப் பார்க்க விரும்பினன். சிறு பிள்ளையாக இருந்தபோது ஏற்பட்ட சந்திப் புக்கள் இப்போது கிட்டுமா? அவளும் வீட்டைவிட்டு வெளிவருவதில்லை? பருவமுள்ள அவனுக்கும் அவளது விட்டிற்குப் போக மனம் துணியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/74&oldid=781743" இலிருந்து மீள்விக்கப்பட்டது