பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு வேட்கை 73 வரலாயிற்று. ஒருவனுக்குச் சொத்து அதிகமாகச் சேர்ந்தாலும் அவனுக்கு அன்ருட வாழ்க்கையில் பயன் படுவது மிகக் கொஞ்சந்தான். இருந்தாலும், அவனிடம் மிகுதியாகச் சொத்து இருத்தல் அவனுக்குப் பெரு மதிப்பைத்தருவதுபோலவே, தொழிலுக்கும் வாணிபத் திற்கும் ஒருவந்தமாயிருக்கும் மொழிக்குப் புறம்பே பழமையையும், புதுமையையும் சிந்திக்கப் பயன்படும் சேமிப்புத் தொகை யால் மொழிக்கும் பெருமை உண்டாகிறது. இப்பகுதிதான் இலக்கியம் என்று வழங்கப்படுகிறது. மனிதனுடைய கருத்து வளம் பெறவே மொழிகளிலும் இலக்கியங்கள் வளர்ந்தன. ஒரு மொழியைப் பேசும் மக்கள் நெடுங்காலமாக உயர்நிலையில் வாழ்ந்திருந்தால்தான் அவர்கள் மொழி யிலும் இலக்கியங்கள் வளர்ந்திருக்க முடியும். இன்னும் உலகத்தில் இலக்கிய வளம் பெருத மொழிகள் எவ்வளவோ இருக்கின்றன. தமிழ் மொழியிலுள்ள இலக்கிய வளத்தைச் சிந்தித்துப் பார்த்தால் தமிழர் களது பழைய வாழ்வின் உயர்கிலேயும் தொன்மையும் விளங்கும். வருங்கால மக்கள் முன்னேர்களின் இலக் கியங்களே யெல்லாம் கற்று ஆராய்தல்தான் கல்வி என்று இசால்லப்படுகிறது. உலகில் உயிர் வாழ்கின்ற உயிர்களுள் மனிதன் தலை சிறந்தவன். வளர்ச்சி நெறிக்கொள்கையும் (Doctrine of Evolution) @ojørðr orjLogo கிறது. மனிதனது காடித்தொகுதி அமைப்பு (Nervous system) அவனது ஒரு தனிச்சிறப்பு. படைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/91&oldid=781779" இலிருந்து மீள்விக்கப்பட்டது